News March 12, 2025

தோல்வியடைந்த மாடலை தமிழகத்தில் புகுத்த முயற்சி: PTR

image

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், மும்மொழி என்ற தோல்வியடைந்த மாடலை புகுத்தி தமிழ்நாட்டின் கல்வித் தரத்தைக் குறைக்க சதி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 60 ஆண்டுகள் ஆனாலும் மும்மொழி கொள்கையை இங்கே அமல்படுத்த முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.

News March 12, 2025

தேசிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தீவிரம்!

image

தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக் குழு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க AP Ex முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விஜயவாடாவில் ஜெகன் மோகனை நேரில் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி.வில்சன் ஆகியோர் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். நேற்று ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை டி.ஆர்.பி.ராஜா சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

News March 12, 2025

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500ஆக உயர்வு

image

புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் <<15732122>>உரிமைத்தொகை <<>>₹1000லிருந்து ₹2500ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில CM ரங்கசாமி அறிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ₹20,000ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

இதை செய்யாவிட்டால் career காலி.. பும்ராவுக்கு வார்னிங்

image

BGT தொடரின் போது காயமடைந்ததால் பும்ராவால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அவருக்கு நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், நீண்ட நாள்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றால், 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் தொடர்ந்து விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

News March 12, 2025

‘இந்தி வாழ்க’ கசிந்த பராசக்தி ஸ்டில்ஸ்!

image

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியைக் கருவாக கொண்டு, தற்போது ‘பராசக்தி’ படம் உருவாகி வருகிறது. படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்புகள் நிலவும் சூழலில், தற்போது சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் கசிந்து வைரலாகி வருகிறது. ஒரு பஸ்ஸில் ‘இந்தி வாழ்க’ என்ற வாசகங்கள் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான படம் தான் போலயே!

News March 12, 2025

டிராவலின் போது வாந்தி வராமல் இருக்க…

image

உடலின் பகுதிகள் மாறி மாறி மூளைக்கும் அனுப்பும் சிக்னலின் காரணமாகவே, திடீரென டிராவலின் போது வாந்தி வருகிறது. இதை தடுக்க சிம்பிள் டிப்ஸை டாக்டர்கள் வழங்குகிறார்கள்: ட்ரெயினில் போகும் போது, வண்டி எந்த திசையை நோக்கி போகுதோ அந்த திசையை பார்த்த மாதிரி அமருங்கள் *காற்று முகத்தில் படும்படி ஜன்னலை திறந்து வையுங்கள் *அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பயணம் செய்ய வேண்டாம் *நன்றாக தண்ணீர் குடியுங்கள்.

News March 12, 2025

தமிழக கல்வி முறையை சீர்குலைக்காதீங்க: அன்பில்

image

NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இருமொழி அடித்தளத்துடன் செயல்படும் தமிழ்நாட்டில் 1,635 CBSE பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால்,1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயின்று வருகின்றனர். இதன் மூலம் மக்கள் எந்த கல்வி முறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

தமிழ் எங்களின் அடையாளம்: அன்பில் மகேஷ்

image

தமிழ்நாட்டில் 3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? என்று தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலக் கல்விமுறையால் உயர்க்கல்வி & வேலைவாய்ப்பில் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மாணவர்கள் மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, கருத்து அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துகிறோம். தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமின்றி, எங்களின் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

பிரபல பாடகர் கோகோ டீ காலமானார்

image

ஜமைக்காவைச் சேர்ந்த ரெக்கே (Reggae) ஜாம்பவான் பாடகர் கோகோ டீ (65) காலமானார். 2019 முதல் புற்றுநோயால் கடும் அவதியடைந்து வந்த அவரது உயிர் பிரிந்துவிட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ரைக்கர்ஸ் ஐலேண்ட், யங் லவர், ஹரி அப் & கம் உள்ளிட்ட பாடல்களால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். கோகோ டீ மறைவுக்கு இசைப் பிரியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPCocoaTea

News March 12, 2025

ரேஷன் கடைகளில் 2 கிலோ கோதுமை இலவசம்: ரங்கசாமி

image

புதுச்சேரியின் 2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை CM ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில், *விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000, *ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், 2 கிலோ இலவச கோதுமை, *வாரத்தின் அனைத்து நாள்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!