News March 13, 2025

தொடர் சரிவில் காய்கறிகள் விலை

image

காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீட்ரூட்- ₹10 – ₹12, கத்திரிக்காய்- ₹15 – ₹40, கேரட்- ₹15 – ₹40, தேங்காய்- ₹25, தக்காளி- ₹10 – ₹16, உருளைக்கிழங்கு-₹15 – ₹20, இஞ்சி-₹40, முருங்கைக்காய்- ₹30க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் கவலை அடைந்துள்ளனர்.

News March 13, 2025

ஃபேன் பாயாக வரேன்..! குட் பேட் அக்லி படத்தில் சிம்பு?

image

‘குட் பேட் அக்லி’ படத்தில் நிறைய சர்ப்ரைஸை அடுக்கி வைத்திருக்கிறாராம் ஆதிக். அதில் ஒரு தகவல் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். படத்தில் அஜித்துடன் சிம்பு ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் எடுத்து வரும் படத்தில், அடுத்தடுத்த ஆனந்த வெள்ளத்தில் ரசிகர்களை மொத்தமாக ஆதிக் மூழ்கடித்துவிடுவார் போலயே!

News March 13, 2025

இந்திய பொருளாதாரம் 6.5% ஆக உயரும் என கணிப்பு

image

மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 6.3% இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5%ஆக அதிகரிக்கும் என கணித்துள்ளது. குறிப்பாக அரசின் மூலதன செலவு, நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான வரி விலக்கு, நுகர்வை ஊக்குவித்தல் மூலம் இவை சாத்தியம் எனக் கூறியுள்ளது. உலகளவில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

News March 13, 2025

வேண்டும் வரன்களை அருளும் குரு காயத்ரி மந்திரம்!

image

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.

News March 13, 2025

கல்வி உதவித் தொகை: மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

image

பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் OBC, EBC & DNT பிரிவினருக்கு பிரதம மந்திரி (PM YASASVI) கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பிற்கு ₹75,000, +2க்கு ₹1.25 லட்சமும் வழங்கப்படும். இதற்கு, <>https://umis.tn.gov.in<<>> என்ற தளத்தில் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

News March 13, 2025

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில், 1 – 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.9 – 24ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு <<15738675>>அட்டவணையும்<<>> வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கோடை விடுமுறை குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. அதன்படி, 1 – 5ஆம் வகுப்புக்கு ஏப்.22ல் இருந்தும், 6 – 9 ஆம் வகுப்புக்கு ஏப்.25ல் இருந்தும் விடுமுறை தொடங்குகிறது.

News March 13, 2025

பிரதீப் ரங்கநாதனின் படத்தில் 3 நடிகைகள்?

image

‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவருடன் அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ஷர்மாவும் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News March 13, 2025

மகளிருக்கு மாதம் ₹2,500 கொடுப்போம்: அண்ணாமலை

image

தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் மகளிருக்கு மாதம் ₹2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும், அதற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் எனவும், கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

News March 13, 2025

போஸ்ட் ஆபிஸ் ATMகளால் அவதி

image

அவதியடைந்துள்ளனர். போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாக எந்த ATM-ம் செயல்படவில்லை. மாற்று ATMகளில் பணம் எடுத்தால், பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மக்கள் புகாரளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பணம் நிரப்பும் ஏஜென்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணம் நிரப்பவில்லை என்றனர்.

News March 13, 2025

தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

image

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!