News March 13, 2025

மொரிஷியஸூடன் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து (2/2)

image

இந்தியா – மொரிஷியஸ் இடையே பரஸ்பரம் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம், கடல்சார் தகவல் பரிமாற்றம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை விரிவாக்குவது உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், மொரிஷியஸில், இந்திய நிதி உதவியுடன் கடலுக்கு அடியில் பைப் லைன் அமைப்பது, ENT மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

News March 13, 2025

BREAKING: சென்னையில் குடும்பமே தற்கொலை

image

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 4 பேரின் உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்?

image

சட்டசபையில் நாளை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், பெண்கள், இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News March 13, 2025

மாணவியை வீடியோ எடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

image

இன்ஸ்டாகிராமில் பழகிய கல்லூரி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி 16 மாதங்களாக 7 பேர் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் பனாஸ்கந்தா பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், தனக்கு நடந்த அவலத்தை கூறியபோது போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொடூரத்தை செய்த விசால் சவுத்ரி, அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள்..

News March 13, 2025

வான் மேகம்; பூப்பூவாய் தூவும்…

image

கோடை தொடங்கும் மார்ச் மாதத்தில் தமிழகத்திற்கு சற்றே குளுமையை கொண்டு சேர்த்திருக்கிறது மழை. வழக்கத்திற்கு மாறாக இம்மாதம் மட்டும் 93% அளவுக்கு மழை பெய்திருப்பதாக மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டிருக்கிறது வானிலை ஆய்வு மையம். அதாவது இந்த மாதம் மட்டும் 26 இடங்களில் கனமழை பெய்துள்ளதாம், 4 இடங்களில் மிககனமழையும் பெய்திருப்பதால் வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவியுள்ளது.

News March 13, 2025

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

image

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 – 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News March 13, 2025

BJP கூட்டணியில் இருந்து இதை செய்தோம்.. இபிஎஸ் புது ரூட்டு!

image

2026 தேர்தலில் ADMK-BJP கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் EPS செயல்பாடுகள் இருப்பதாக, பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதற்கு காரணம் EPS-இன் X பதிவுதான். அதில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் 7.5% இட ஒதுக்கீடு, காவிரி மேலாண்மை ஆணையம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகிய நல்ல திட்டங்களைச் செய்ததாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

News March 13, 2025

மாசி மக பெளர்ணமியில் ஈசனை வழிபடுவோம்!

image

மாசி மக பெளர்ணமியான இன்று சிவ வழிபாடு அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் தான் பெளர்ணமியாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரிய, சந்திர வழிபாடும் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும். அதிலும் மாசி மாதத்தில் வரும் இந்த நிறைந்த பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் சாலச் சிறந்தது.

News March 13, 2025

14 கடைகளில் கொள்ளை: ஷாக்கான திருடர்கள்

image

மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.

News March 13, 2025

ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா?

image

காசா, உக்ரைன் போர்களில் மத்தியஸ்தராக செயல்பட்ட அமெரிக்க சிறப்பு பிரதிநிதி விட்காஃப் இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளார். உக்ரைன், தனது பிடிவாதத்தை விட்டு இறங்கியதை அடுத்து, போர் நிறுத்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்திருக்கிறது அமெரிக்கா. ரஷ்யாவுடன் பேசி போரை நிறுத்த, விட்காஃபை மாஸ்கோவுக்கு அனுப்பவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். புதினும் இதற்கு சம்மதிப்பார் என டிரம்ப் நம்புகிறார்.

error: Content is protected !!