News March 13, 2025

தூக்கம் தவிர்த்தால், சிறுநீரகம் பாதிக்கும்

image

இரவுத் தூக்கத்தை தவிர்த்தால், அது பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரகங்களில் சேதமடைந்திருக்கும் திசுக்களை இரவில் தான் உடல் பழுதுபார்த்து சரி செய்கிறது. ஆகவே, இரவில் தூங்குவது அவசியம். குறிப்பாக, உள்ளுறுப்புகள் தங்கள் பழுதுகள், கழிவுகள் நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை விழித்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

News March 13, 2025

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 38 டாலர்கள் உயர்ந்து, 2,978 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இந்த விலையை மையப்படுத்தியே இந்திய சந்தைகளில் தங்க நகைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 13, 2025

இளையராஜாவுக்கு அரசு விழா – முதலமைச்சர் அறிவிப்பு!

image

தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றி உலக இசைப் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தார். சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றி சாதனை படைத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணம், அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பங்கேற்புடன் விழா நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2025

AUSM அணிக்கு 221 ரன்கள் இலக்கு

image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், ஆஸி., மாஸ்டர்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய மாஸ்டர்ஸ் அணி. ராய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய INDM அணி, 20 ஓவர்களில் 220/7 ரன்கள் குவித்தது. சச்சின் 42, யுவராஜ் 59, பின்னி 36, யூசுப் பதான் 23 ரன்கள் எடுத்தனர். AUSM தரப்பில் சேவியர், டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

News March 13, 2025

ரேஷன் அட்டைதாரர்களே. கவனிங்க…

image

ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும், அரசு ஹாஸ்பிடல்களில் தீவிர சிகிச்சைகளுக்கு தாமதம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களிடம் மருத்துவ காப்பீடு இல்லாமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே ஆதரவற்றவர்களாக இருக்கும் அவர்கள், அரசு ஹாஸ்பிடலுக்கு வரும்போது அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

மத்திய பல்கலை.களில் 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலி!

image

நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டிகளில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், இதில் SC – 788, ST – 472, OBC – 1,521 பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 7,825 ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம்கள் மூலம் நிரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 13, 2025

80 ஆண்டுகள் காத்திருந்த காதலி… காலமானார்

image

சில காதல் கதைகள் மனதை கனக்கச் செய்துவிடும். சீனாவை சேர்ந்த டு வூஷென் என்ற பெண்ணும், ஹுவாங் என்ற இளைஞரும் 1940-ல் திருமணம் செய்தனர். அதன்பின் ஹூவாங் ராணுவத்துக்கு போய்விட்டார். இடையில் ஒருமுறை மட்டும் மகனை பார்க்க வந்தார். 1952-ல் கடைசியாக அவரிடமிருந்து கடிதம் வந்தது. ஆனால், தன் கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் 80 ஆண்டுகள் காத்துக் கிடந்த 103 வயது வூஷென் கடந்த வாரம் காலமானார். இது காதல்!

News March 13, 2025

அடித்து ஆடும் இந்திய மாஸ்டர்ஸ் அணி

image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AUSM அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய INDM அணி, AUSM பவுலர்கள் வீசும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விடுகின்றனர். சச்சின் 39* (25), யுவராஜ் 19* (10) களத்தில் உள்ளனர். INDM அணி தற்போது வரை 9 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது.

News March 13, 2025

செவ்வாய் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

image

செவ்வாய் பகவான் கடந்த பிப்.24-ம் தேதி மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதனால் பின்வரும் 3 ராசிகள் நற்பலன்கள் பெறுவார்கள்: *மேஷம்: குடும்பத்தில் குழப்பங்கள் தீரும், பணியில் முன்னேற்றம், மனப் பிரச்னைகள் தீரும் *கடகம்: சிக்கல்கள் குறையும், திருமண யோகம், புதிய வீடு, வாகன வாய்ப்பு, தன்னம்பிக்கை, தைரியம் கூடும் *சிம்மம்: நிதி ரீதியான முன்னேற்றத்தால் கடன்சுமை குறையும், வெளிநாட்டு பயண வாய்ப்பு.

News March 13, 2025

மது பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் விலை: ED

image

<<15749508>>டாஸ்மாக்<<>> போக்குவரத்து ஒப்பந்தத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், மதுபாட்டிலுக்கு 10 – 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ED தெரிவித்துள்ளது. பெரும் லாபத்திற்காக போலி கணக்குகளை செலவில் காட்டி மோசடி நடத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ED, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!