News March 14, 2025

8 மாவட்டங்களில் புதிய அரசுக் கலைக் கல்லூரிகள்

image

சென்னை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழங்குடி மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அரசு யுனிவர்சிட்டிகளுக்கு ₹700 கோடியும், அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையத்திற்கு ₹50 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.

News March 14, 2025

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

image

காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். மலைப் பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும். 2,676 அரசுப்பள்ளிகளில் ₹65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

மழைநீரை உறிஞ்ச 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்

image

சென்னை பெருநகரப் பகுதிகளில் நிலத்தடி நீரை பெருக்க பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெருநகரப் பகுதிகளில் ₹ 88 கோடி செலவில் மழைநீரை உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 14, 2025

சுகாதாரத் துறைக்கு ரூ.21,906 கோடி!

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஹாஸ்பிட்டல்கள், உயர்ரக மருத்துவ ஆய்வகங்களின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்று, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோருக்கு குட்நியூஸ்!

image

இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது என்பது, இப்போது வரை மிகப்பெரிய சாதனையாகவே கருதப்பட்டு வருகிறது. எனினும், எவரெஸ்ட் ஏறும் வீரர், வீராங்கனைகளுக்கு சொல்லும்படியான பரிசுத்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்தக் குறையை தீர்க்கும் வகையில், எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

இனி இவர்களுக்கும் மாதம் ₹1,000

image

பள்ளிக்கல்வித் துறைக்கு ₹46,760 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது அவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படும் எனக் கூறிய அவர், மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படை பணியில் சேர்க்கப்படுவர் எனவும் அறிவித்துள்ளார்.

News March 14, 2025

ராமேஸ்வரத்தில் புதிய விமானநிலையம்!

image

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பாம்பன் பாலம் சீரமைக்கப்பட்டு வருவதால் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு செல்வதில் ரயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் செல்ல வசதியாக, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

News March 14, 2025

₹310 கோடியில் வேளச்சேரியில் புதிய மேம்பாலம்!

image

சென்னை வேளச்சேரியில் ₹310 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தொலைவுக்கு புதிய மேம்பாலம் அமையவுள்ளதாகவும், இதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

புதிய ஆசிரியர் பணியிடங்கள்

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2,000 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம்

image

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்புச்சோலை திட்டம் மூலம் 25 இடங்களில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!