News March 15, 2025

பாப் பாடகர் ஸ்டெட்மென் பியர்சன் காலமானார்

image

பிரிட்டனைச் சேர்ந்த பாப் பாடகர் ஸ்டெட்மென் பியர்சன் (60) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த மிகவும் பழமையான பாப் பாடல் குழு FIVE STAR ஆகும். இதில் ஒரு அங்கமாக விளங்கிய பியர்சன், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பியர்சன் மறைவுக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News March 15, 2025

சாப்பிட்டு, தூங்கினால் போதும்… ரூ.4.7 லட்சம் சம்பளம்

image

இது ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் (ESA) சூப்பரான ஆஃபராகும். Lab-ல் உள்ள வாட்டர் பெட்டில் 10 நாட்கள் தங்கினால், ரூ.4.7 லட்சம் வெகுமதி பெறலாம். இதற்காக உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் கன்டெய்னரில், மிதக்கும் உணர்வை தரும் பெட்டில் படுத்திருக்க வேண்டும். பெட்டுக்கே உணவுகள், பானங்கள், போன் வந்துவிடும். விண்வெளி பயணத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய சில சோதனைகள் இங்கே செய்யப்படும். அவ்வளவு தான்!

News March 15, 2025

சிறுவயதில் பாலியல் தொந்தரவு.. நடிகர் வேதனை

image

ஹாலிவுட் நடிகர் ஜோனாதன் மேஜர்ஸ், 9 வயது சிறுவனாக இருந்தபோது பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். பத்திரிகை பேட்டியில் கசப்பான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், ஆண்களும் பெண்களும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தந்தை இல்லாததால் கவனிப்பதாக கூறி, இதை அவர்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆன்ட்மேன் அன்ட் தி வாஸ்ப், க்ரீட் 3 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

News March 15, 2025

செங்கோட்டையன் விவகாரம் – மீண்டும் வெடிக்கும் மோதல்

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான மறைமுக மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய வைகைச் செல்வன், செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது என விமர்சித்துள்ளார். செங்கோட்டையனுக்கு எதுவும் பிரச்னை இருந்தால் இபிஎஸ்ஸை சந்திக்க வேண்டுமே தவிர, இப்படி நடந்து கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் வைகைச் செல்வன் கூறினார்.

News March 15, 2025

மீன ராசியில் சனி: பணமழை கொட்டும் 3 ராசிகள்

image

சனி பகவான், மார்ச் 29-ல் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதனால் நற்பலன்கள் அடையப் போகும் ராசிகள்: *ரிஷபம்: தொழில், வேலையில் பெரிய வெற்றி, கல்வியில் முன்னேற்றம், தடைகள் நீங்கும் *கடகம்: வணிகத்தில் லாபம் பெருகும், குடும்ப வாழ்க்கை சிறக்கும், சிக்கல் குறையும் *விருச்சிகம்: தொழிலில் லாபம் உயரும், பெரிய முன்னேற்றம், காதல்- திருமண வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகும், சிக்கல்கள் தீரும்.

News March 15, 2025

டில்லி ரிட்டர்ன்ஸ்… கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!

image

லோகேஷ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கைதி. அதில், டில்லி கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் கார்த்தி. இதன் 2ம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, கார்த்தி குட் நியூஸ் கொடுத்துள்ளார். X தளத்தில் டில்லி ரிட்டன்ஸ் என குறிப்பிட்டு லோகேஷுடன் இருக்கும் படத்தை அவர் பதிவிட்டுள்ளார். கூலி ஷூட்டிங் முடிந்த பின் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 15, 2025

கொரோனாவால் ஆண்களுக்கு நேர்ந்த கொடுமை

image

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 20121-ல் கொரோனா பாதித்த ஆண்களில் 5-ல் ஒருவருக்கு விறைப்புத்தன்மை பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு பாதிப்பு தொடர்கிறதாம். ஆணுறுப்பு ரத்தநாளங்களை வைரஸ்கள் பாதித்ததால், விறைப்பு நிலையை எட்டுவது இவர்களுக்கு கடினமாக உள்ளதாம். ஆண்களுக்கு வந்த சோதனை!

News March 15, 2025

நாய் கீறி விட்டதா? இதை செய்ய மறக்காதீங்க

image

வேலூரில் ரமேஷ் (49) என்பவரை, நாய் கீறிவிட்டுள்ளது. அவரும் அதை பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வரவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டும் டாக்டர்கள், நாய் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமல்ல, கீறினாலும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, தடுப்பூசி போட மறக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர்.

News March 15, 2025

இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

image

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

News March 15, 2025

மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்

image

மக்களின் நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறும்போது அவர்களது செயல்கள் தடம் மாறுகின்றன. போபாலில் 6 மாத குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருக்க, அதற்கு பேய் பிடித்திருப்பதாக மாந்திரீகர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், பேய் ஓட்டுவதாக கூறி, நெருப்பின் மேல் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!