News March 16, 2025

முறைகேடு விசாரணை உறவுக்காரர்கள் கையில்: விஜய்

image

<<15777897>>டாஸ்மாக் <<>>முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் (பாஜக), இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் (திமுக) மட்டுமே வெளிச்சம் என்று விஜய் விமர்சித்துள்ளார். முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி என சாடிய அவர், எத்தனை கோடிகளை கொட்டினாலும் திமுகவை 2026இல் மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றார்.

News March 16, 2025

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

image

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதியடைந்து வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்ற இவரின் கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. எழுதுவது மட்டுமல்ல, சமூக களப்பணியிலும் முன்னணியில் இருப்பவர்.

News March 16, 2025

பஸ்ஸூல உட்கார வேற இடமே கிடைக்கலையா?

image

ஆந்திராவில் மது போதையில் இருந்த நபர் அரசு பஸ்ஸூக்கு அடியில், ஸ்டெப்னி டயர் இருக்கும் பகுதியில் தொங்கியபடி பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 15 கி.மீ தூரம் வரை அந்த நபர் பயணித்த நிலையில், பின்னால் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரிடம் தகவல் அளித்து எச்சரித்துள்ளனர். அதன் பிறகே, பஸ்ஸை நிறுத்தி, ஸ்டெப்னி டிராவல் பயணியை மீட்டனர். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் என்னவாகியிருக்கும்?

News March 16, 2025

ஊழலில் திமுகவினர் வல்லவர்கள் : விஜய் அட்டாக்

image

டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு குறித்து நியாயமாக விசாரிக்க விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு என சாடிய அவர், அமலாக்கத்துறை கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி என்ற கையளவு நீரே!, முழுமையாக விசாரணை நடத்தினால் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் ( கீழ்மட்ட அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை) வரை சிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு…

image

ஹோலி பண்டிகை, வீக் எண்ட் என தொடர் விடுமுறை காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இலவச தரிசனத்திற்காக 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள 31 க்யூ காம்ப்ளக்ஸ் நிரம்பி வழிகிறது. நேற்று மட்டும் 82,580 பேர் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கை மட்டும் ₹ 4 கோடி வசூலாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

News March 16, 2025

ரகுமான் உடல்நிலையை கேட்டறிந்த முதல்வர்

image

ஏ.ஆர்.ரகுமான் திடீர் நெஞ்சு வலியால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலைக் குறித்தும், தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து அவரது X பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

News March 16, 2025

நடிகை டெலியா ரஸோன் காலமானார்

image

பழம்பெரும் நடிகையான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டெலியா ரஸோன் (94) காலமானார். Krus na Bituin திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், பல்வேறு திரைப்படங்கள் & தொடர்களில் நடித்துள்ளார். “லுக்சாங் தகும்பே” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான FAMAS விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், 2009இல் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News March 16, 2025

இந்தியாவுக்கு அச்சுறுத்தலான பயங்கரவாதி சுட்டுக்கொலை

image

லஷ்கர்-ஏ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி அபு கத்தால் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அபு கத்தால். இவனுக்கு 2017 ரியாசி குண்டுவெடிப்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலிலும் தொடர்புள்ளது. இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த கத்தாலை NIA நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர்.

News March 16, 2025

பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து

image

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 10 ஓவர்களில் இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்றது. CT-யில் லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறது.

News March 16, 2025

கனடா அமைச்சரவையில் இந்திய பெண்கள்!

image

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஒருவர் கமல் கேரா, மற்றொருவர் அனிதா ஆனந்த். டெல்லியை சேர்ந்த கமல் கேரா, நர்ஸ் என்பதால் கார்னி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ் வம்சாவளியை சேர்ந்த 58 வயதான அனிதா ஆனந்த் அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகியுள்ளார்.

error: Content is protected !!