News March 16, 2025

லெஜண்ட்ஸ் லீக் ஃபைனல்: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

image

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் தொடரின் ஃபைனலில், சச்சின் தலைமையிலான இந்தியாவும், லாராவின் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், சிம்மோன்ஸ் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சேஸ் செய்து கோப்பையை வெல்லுமா? கமெண்ட்டில் சொல்லுங்க.

News March 16, 2025

நடிகை பிந்து கோஷின் இறுதி நாள்கள்

image

1980களில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகையான பிந்து கோஷ், இறுதி நாள்களில் வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் <<15781169>>உயிரிழந்திருக்கிறார்.<<>> அந்த காலத்திலேயே சென்னை தசரதபுரத்தில் பங்களா வீடு வைத்திருந்த அவர், 10 நாய்கள் வளர்த்திருக்கிறார். ஆனால், வயிற்றில் 13 கிலோ சதையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததால், உடல் நலன் குன்றி சிகிச்சையிலேயே மொத்த சொத்தையும் இழந்து வறுமையில் இறந்திருக்கிறார்.

News March 16, 2025

CISFஇல் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள 1,161 கான்ஸ்டபிள் நிலையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் சமையலர், பெயிண்டர், டெய்லர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர். இந்த வேலைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் இணையதளமான <>இதில்<<>> ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற ஏப்ரல் 3ஆம் தேதியே கடைசி.

News March 16, 2025

உத்தரகாண்ட் நிதியமைச்சர் ராஜினாமா

image

உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் பட்ஜெட் தாக்கலின்போது, உத்தரகாண்ட் ஒன்றும் மலைப்பகுதி மக்களுக்கானதல்ல என அவர் பேசியிருந்தார். இதையடுத்து உத்தரகாண்ட் பாஜக அரசு, மலைப்பகுதி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால் சர்ச்சை உருவான நிலையில், பதவியை பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார்.

News March 16, 2025

ராணா பிரதாப் சிங்கின் வாரிசு காலமானார்

image

புகழ்பெற்ற ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றல், அரவிந்த் சிங் மேவார்(81). நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இன்று அவர் காலமானார். ரஞ்சி கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார். இவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். பரம்பரை சொத்துகளுக்காக மேவார் குடும்பத்தில் சட்டப் போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

2002 குஜராத் கலவரம்… மனம் திறந்தார் மோடி

image

2002 குஜராத் கலவரம் குறித்து PM மோடி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 2002க்கு முன்பு 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்று இருப்பதாகவும், ஆனால் 2002 கலவரம் மிகைப்படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பால் தன்மீதான களங்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளார். 2002க்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடக்கவில்லை, தமது நிர்வாகம் அமைதியை நிலை நிறுத்தியது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

ராஷ் ட்ரைவிங்.. என்ன தண்டனை தெரியுமா?

image

சாலைகளில் சிலர் பிறருக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதை பார்த்து இருப்போம். இது சட்டப்படி குற்றமாகும். இதற்கு BNS, மோட்டார் வாகனச் சட்டங்களில் தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது. BNS சட்டத்தில் 6 மாதம் சிறை (அ) ரூ.1,000 அபராதம் (அ) 2 தண்டனையும் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில், 2 ஆண்டு வரை சிறை, ரூ.10,000 அபராதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

துணிச்சலான மனிதர்.. டிரம்புக்கு மோடி பாராட்டு

image

துணிச்சலான மனிதர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை PM மோடி புகழ்ந்துள்ளார். முதல்முறை அமெரிக்க அதிபராக இருந்ததைவிட, தற்போது 2ஆவது பதவிக்காலத்தில் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு டிரம்ப் வந்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். தனக்கும், டிரம்புக்கும் பரஸ்பரம் நல்ல புரிதல் உண்டு என்றும், தங்கள் 2 பேருக்கும் அனைத்து விவகாரங்களையும் விட தேச நலன்களே பெரிது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

ராகு கேது பெயர்ச்சி. பணம் கொட்டப் போகுது

image

2025ஆம் ஆண்டுக்கான ராகு, கேது பெயர்ச்சி மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சர்ப்ப கிரகங்கள் எப்போதும் நன்மை தரக்கூடியவை இல்லை என்றாலும், 2026 வரை அவை அமர்ந்திருக்கக்கூடிய இடத்தைப் பொறுத்து சில ராசிகளுக்கு யோகம் வாய்க்கப்போகிறது. ராகு, கேது பெயர்ச்சியால் மிதுனம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது.

News March 16, 2025

TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு

image

TMB வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அந்த வங்கியின் கிளைகளில் 124 சீனியர் கஸ்டமர் சர்வீஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!