News August 9, 2025

தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டது: அன்புமணி

image

பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

News August 9, 2025

பாமக மெகா கூட்டணி அமைக்கும்: அன்புமணி

image

பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

News August 9, 2025

கணவரை பிரிகிறேனா? சங்கீதா பரபரப்பு Statement!

image

நடிகை சங்கீதா இன்ஸ்டாவில் ‘சங்கீதா கிரிஷ்’ என்ற தனது Profile பெயரை ‘சங்கீதா சந்தரம்’ என மாற்றியது, பெரும் வைரலாக மாறி, அவர் விவாகரத்து செய்ய போகிறார் என பேசப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நியூமராலஜிக்காக பெயரை இவ்வாறு மாற்றியிருப்பதாக சங்கீதா தற்போது விளக்கமளித்துள்ளார். இவருக்கும் பாடகர் கிருஷுக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 9, 2025

₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

image

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

திமுகவில் இணைந்தவுடன் அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு

image

சமீபத்தில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பை ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆம்! திமுகவின் இலக்கிய அணி தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு 2026 தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 9, 2025

திருமாவளவன் காணாமல் போவார்: EPS

image

<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

News August 9, 2025

30 ஆண்டுகளாக PM மோடிக்கு ராக்கி கட்டும் PAK பெண்!

image

PM மோடிக்கும் PAK பெண் ஒருவருக்கு இருக்கும் சகோதரத்துவ பந்தம் வியப்பில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தானில் பிறந்த கமர் மொஹ்சின் ஷேக், இந்தியர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு அகமதாபாத்தில் செட்டிலாகினார். 90-களில் மோடியை(அப்போது அவர் CM கூட இல்லை) முதன்முதலில் சந்தித்து ராக்கி கட்டிய கமர், அப்பழக்கத்தை 30 ஆண்டுகளாக தொடர்கிறார். ராக்கியை அவர் வாங்குவதில்லை, அவரே ஸ்பெஷலாக தனது கையால் தயாரிக்கிறார்.

News August 9, 2025

திமுகவை வீழ்த்த வேண்டும் என PMK பொதுக்குழுவில் தீர்மானம்

image

<<17350932>>பாமக பொதுக்குழு<<>> கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வு, மோசடி அரசு, போதைப்பொருள் அரசு என கடும் வார்த்தைகளுடன் கூடிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், திமுக அணியில் PMK இல்லை என்பதை அன்புமணி உறுதி செய்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

News August 9, 2025

அன்புமணி தலைவராக தொடர்வார் என தீர்மானம்

image

2026 ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பதவிக்காலமும் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!