News March 17, 2025

தமிழ்நாட்டில் டாப்… பரோட்டாவுக்கு அங்கீகாரம்

image

பரோட்டா நல்லதா கெடுதலா என்று விவாதம் நடந்தாலும், தமிழ்நாட்டு பரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு. அதற்கு புகழ் சேர்க்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. Taste Atlas என்ற உணவு நிறுவனம், உலகின் 50 சிறந்த பிரெட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பட்டர் கார்லிக் நாண் முதலிடம் பிடித்துள்ளது. 6வது இடத்தில் இருப்பது நம்ம பரோட்டா தான். இந்த செய்தியை பரோட்டா பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 17, 2025

தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திருப்பி தரப்படுமா?

image

ரயிலில் அவசர பயணம் செய்வோருக்கு, பயண நாளுக்கு முந்தைய தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் டிக்கெட் வசதியை ரயில்வே செய்து தந்துள்ளது. சாதாரண பெட்டிக்கு காலை 11 மணி, ஏசி பெட்டிக்கு காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கும். மற்ற டிக்கெட்டை விட இது சற்று விலை அதிகமாகும். இதில் ரயில் ரத்தானால் மட்டுமே கட்டணம் திருப்பித் தரப்படும். டிக்கெட்டை பயணி ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது.

News March 17, 2025

ஊழல் புகாருக்கு ஆதாரம் எங்கே? ரகுபதி விளாசல்

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் எனத் தெரிவிப்பதற்கு ஆதாரம் எங்கே? என்று சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். ED-யை பாஜக கேடயமாக பயன்படுத்துகிறது எனவும், முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை தவறாக பேசி இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். CM ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார், திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 17, 2025

தெரு நாய்கள் தொல்லை குறையாதது ஏன்?

image

தெரு நாய் தொல்லை குறித்து சட்டப்பேரவையில் KMDK தலைவர் ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் KN. நேரு பதிலளித்துள்ளார். அப்போது அவர், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அதே இடத்தில் விட்டுவிட வேண்டும் என்று கோர்ட் கூறியுள்ளது. கருத்தடை சிகிச்சையின்போது நாய் உயிரிழந்தால் அலுவலர்கள் சிறை செல்ல நேரிடும். எனவே அவர்கள் நாயை பிடிக்கவே அஞ்சுவதாக பதிலளித்தார். உங்கள் கருத்தை சொல்லுங்க.

News March 17, 2025

தமிழ் வீராங்கனை மறைந்தார் RIP

image

ஓட்டப்பந்தைய வீராங்கனையும், கல்வியாளருமான ரேணுகா சத்தியநாதன்(37) காலமானார். சிங்கப்பூர் தமிழரான இவர், அந்நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர். குறிப்பாக 5000 மீ, 10,000 மீ பந்தையங்களில் சிறந்து விளங்கினார். ஓய்வுக்கு பின் பயிற்சியாளராகவும் செயல்பட்ட அவரின் அகால மரணத்துக்கு, சிங்கப்பூர் உள்பட உலகத் தமிழர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு நேற்று சிங்கப்பூரில் நடந்தது.

News March 17, 2025

விந்தணுக்களை அதிகரிக்க இந்த காய்கறிதான் பெஸ்ட்!

image

கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு, தரத்தை அதிகரிப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறதாம். கேரட்டில் கரோட்டினாய்டு அதிகமாக இருப்பதால், விந்தணு குறைபாட்டை போக்க பெரிய அளவில் உதவுகிறதாம். கருமுட்டையை அடையும் அளவிலான சக்தியை விந்தணுவுக்கு கேரட் கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிமேல் தினமும் உணவில் கேரட்டை சேர்த்துக்கோங்கப்பா!

News March 17, 2025

Laptop திட்டத்தை நிறுத்தியதே நீங்க தான்: CM ஸ்டாலின் தாக்கு

image

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றஞ்சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த CM ஸ்டாலின், ‘மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, நீங்களே நிறுத்திவிட்டுதான் சென்றீர்கள்’ என பதிலளித்தார். திட்டத்தை சரிசெய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாகவும் CM தெரிவித்தார்.

News March 17, 2025

ரேஷன் அரிசியில் இனி 10% மட்டுமே குருணை

image

ரேஷன் அரிசியில் 25% வரை குருணை கலக்க முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், அந்த அளவை 15% குறைத்து இனி 10% மட்டுமே ரேஷன் அரிசியில் குருணை கலக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷனில் விநியோகிக்கப்படும் அரிசியில் அதிக குருணை இருப்பதாகவும், தரமில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவினால் இனி ரேஷனில் தரமான நல்ல அரிசி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

News March 17, 2025

‘பாகுபலி’ ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்

image

திரையுலகில் தற்போது எடுக்கப்படும் பிரம்மாண்ட படங்களுக்கு அளவு கோலே பாகுபலிதான். இந்திய திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23ஆம் தேதி, ‘பாகுபலி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ரவுண்டுக்கு நீங்க ரெடியா?

News March 17, 2025

ரம்ஜான்: 32 லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு மோடி பரிசு

image

மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையன்று 32 லட்சம் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் ‘Saughat-e-Modi’ பரிசு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. பாஜக சார்பில் 32,000 பேர் இதற்காக நியமிக்கப்பட்டு, முஸ்லிம்களின் தேவை குறித்து மசூதிகளில் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் அன்று மோடி பரிசு பெட்டகத்தை விநியோகிக்க பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் மாவட்ட அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

error: Content is protected !!