News March 17, 2025

இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதி: துளசி

image

இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதிபூண்டு இருப்பதாக USA உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பெண்ணான துளசி கப்பார்ட் டெல்லி வந்துள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமிய தீவிரவாதத்தால் இந்தியா, வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். இது மிகப்பெரிய அச்சுறுத்தல், இது முறியடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News March 17, 2025

குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

image

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.

News March 17, 2025

ஆபரேசன் மூலம் ஆண், பெண்ணாக மாற அனுமதியா?

image

மத்திய அரசால் 2019ஆம் ஆண்டில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் 15ஆவது பிரிவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் ஆணாக பிறக்கும் ஒருவர் ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறவும், பெண்ணாக பிறக்கும் ஒருவர் ஆபரேசன் மூலம் ஆணாக மாறவும் இந்தப் பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

கிருஷ்ணரின் போதனைகள் சக்தி அளித்தது: துளசி

image

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் அளித்த போதனைகளே, தனக்கு சக்தி அளித்ததாக USA உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறியுள்ளார். மகிழ்ச்சியான, இக்கட்டான நேரங்களில் பகவத் கீதை படிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், அதிலுள்ள போதனைகள் சக்தி, அமைதி, ஆறுதல் அளிப்பதாகவும் கூறினார். இந்தியா வந்தது மகிழ்ச்சி, இந்தியாவில் இருக்கும்போது சொந்த நாட்டில் இருப்பதாக உணர்கிறேன் என்றார் அவர்.

News March 17, 2025

ஒரு ஆண்டில் 365 நாட்கள்… எப்படி வந்தது?

image

365 நாட்கள் ஒரு ஆண்டு. அது எப்படி 365 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது எனத் தெரிந்து கொள்வோம். பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் பிடிக்கும். இதை வைத்து, 365 நாட்கள் என்பது ஒரு ஆண்டு என கணக்கிட்டு கிரகோரியன் நாட்காட்டி தயாரிக்கப்பட்டது. இதில் விட்டுப்போன 0.25 நாள், 4 ஆண்டுகள் சேர்த்து வைக்கப்பட்டு ஒருநாளாக 5ஆவது ஆண்டில் சேர்க்கப்பட்டு 366 நாட்களாக கணக்கிடப்படும். இது லீவ் வருடம் எனப்படும்.

News March 17, 2025

முக்கிய அரச வாரிசு மறைந்தார்

image

புகழ்பெற்ற ராஜபுத்திர மன்னர் மகா ராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றலான <<15783384>>அரவிந்த் சிங் மேவார்<<>> நேற்று காலமானார். மேவார் அரச குடும்பத்தின் வாரிசான இவர், இளம் வயதில் ராஜஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நீண்டகாலம் இருந்தார். முக்கிய பிரபலங்கள், தலைவர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், இன்று அவரின் இறுதிச்சடங்குகள் உதய்பூரில் நடைபெற்றது. RIP!

News March 17, 2025

இப்படியும் மோசடி… பறிபோன ரூ.20 கோடி… உஷார் மக்களே!

image

நாம் எவ்வளவு விழிப்போடு இருந்தாலும் சைபர் குற்றங்கள் அதிகரிக்கவே செய்கின்றன. மும்பையில் 86 வயது மூதாட்டி சைபர் குற்றவாளிகளால் ரூ.20.25 கோடியை இழந்துள்ளார். அவரின் ஆதார் அட்டையை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்து சைபர் கும்பல் பணத்தை கறந்துள்ளது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். மோசடி கும்பலை போலீஸ் கைது செய்ததாக கூறப்படுகிறது.

News March 17, 2025

பெரிய சம்பவத்திற்கு அடிபோடும் ‘குட் பேட் அக்லி’…!

image

அஜித் நடிப்பில் ஏப்ரல் 10-ல் வெளியாகிறது குட் பேட் அக்லி திரைப்படம். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 1,000 திரைகள் மற்றும் ஹிந்தியிலும் அதிக திரைகளில் குட் பேட் அக்லி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 17, 2025

மும்மொழிக் கொள்கையை இப்படியா அமல்படுத்துவீங்க!

image

மும்மொழிக் கொள்கை விவகாரத்துல தமிழ்நாடு அரசு vs மத்திய அரசு விவகாரம் எல்லோருக்கும் தெரியும்தானே? ஆனா, அதையே வியாபாரமா மாத்தி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பண்ண வேலைய பாருங்க. அவங்க பிராண்ட் பேரின் ‘இன்’ ஹிந்திலயும், ‘டி’ தமிழ்லயும், ‘கோ’ ஆங்கிலத்துலயும் எழுதியிருக்காங்க. இந்த ஜாலியான அணுகுமுறையை பார்த்து சிலர் சிரிச்சிட்டு போனாலும், சிலர் கண்டிக்கதான் செய்றாங்க.

News March 17, 2025

அரசியல் நுழைவு பற்றி யோசிக்கிறேன்: வைரமுத்து

image

தான் அரசியலுக்குள் வருவது குறித்து வைரமுத்து பூடகமாக கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ‘வைரமுத்தியம்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது படைப்புகளில் அரசியல் உண்டு; ஆனால் தான் அரசியலில் இல்லை எனக் கூறினார். மேலும், அரசியல் மாறிக் கொண்டே இருக்கும்; சித்தாந்தம் மாறாது எனத் தெரிவித்த வைரமுத்து, நாடாளுமன்றம் என்னை பற்றி கனவு கண்டால், அரசியல் நுழைவு பற்றி யோசிப்பேன் என சூசகமாக குறிப்பிட்டார்.

error: Content is protected !!