India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில். புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சட்டப்பேரவையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். மொழி வெறுப்பதற்கான ஒன்று அல்ல எனக் கூறிய அவர், ஆந்திராவில் தாய்மொழி தெலுங்கு, தேசிய மொழி ஹிந்தி, சர்வதேச மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் தற்போது சந்திர பாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
IPL திருவிழா வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 20-ல் மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் கேப்டன்கள், அணிகளின் மேனேஜர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், IPL-ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பின் கேப்டன்களுக்கான போட்டோஷுட் நடத்தப்பட உள்ளது.
எம்பிஏ குறித்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் CHRO சீமா ரகுநாத் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி அளித்துள்ளது. திறமையும், சிந்திக்கும் ஆற்றலும் இல்லாத எம்பிஏ பட்டதாரிகளே தற்போது நிரம்பியுள்ளனர். எம்பிஏ டிகிரியை புறந்தள்ளிவிட்டு, உண்மையான அறிவையும், திறமையையும் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அடிப்படை ஐக்யூ கூட இல்லாமல் இருக்கும் எம்பிஏ பட்டம், இனி டாய்லெட் பேப்பருக்கு சமம் என அவர் கூறியுள்ளார்.
CT தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ₹869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடரை நடத்திய பாக்., அணி ஒரு போட்டியை மட்டுமே அங்கு விளையாடியது. ஒரு போட்டி துபாயிலும், ஒரு போட்டி மழையாலும் ரத்தாக, அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்த அந்த கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு இனி 5 Star ஹோட்டல் கிடையாது, சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மனிதர்களின் காயங்களை நாய் நக்கினாலும் ஏஆர்வி ரேபிஸ் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடாத நபர், ராணிப்பேட்டையில் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில், காயங்களில் நாய் நக்கினாலும், நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது பட்டாலும் விஷம்தான். இதற்கும் ஏஆர்வி தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
‘பாட் காஸ்ட்’ நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், ‘மரணத்தை நினைத்து நீங்கள் என்றாவது பயந்தது உண்டா?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயமாகி விட்டதாகவும், நிச்சயமாக நடக்கப் போகும் ஒரு விஷயத்தை பற்றி எதற்கு பயப்பட வேண்டும்? என்றும் வினவினார். அதனால், மரண பயத்தை புறந்தள்ளி வாழ்க்கையை நேசிக்க வேண்டும் எனக் கூறினார்.
சூரியன், புதன், சுக்கிரன், ராகு என 4 கிரகங்கள் தற்போது மீன ராசியில் சஞ்சரித்துள்ளன. இதனால் சதுர்கிரஹி யோகம் உருவாகியுள்ளது. இது தனுசு, கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு யோகத்தை அள்ளித் தர போகிறது. நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும். புதிய பதவி மற்றும் கெளரவம் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் தீரும். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். அங்கு ஜூனில் நடைபெறும் சுப்ரபாதம், அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட் பெற நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பக்தர்கள் டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025ம் நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ரூ.21,370 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.4,198 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.