News July 11, 2025

சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை 25-ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-24641919 (அ) 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News July 11, 2025

‘நிபா’ வைரஸ் பரவல்.. பழங்களை கழுவி சாப்பிடுங்க

image

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும். குறிப்பாக பழ வகை வெளவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT.

News July 11, 2025

கடன் வாங்காமல் சமாளிக்க… சிம்பிள் டிப்ஸ்!

image

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என்ற காலம் மாறி, ஆடம்பரத்துக்காக தற்போது கடன் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால், இது பெரும் சிக்கல்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடன் வாங்காமல் இருக்க, இந்த சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க
✦ஒரு குறிப்பிட்ட தொகை கையிருப்பு வெச்சிக்கோங்க
✦திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு சின்ன சேமிப்பு வேண்டும்
✦பங்குச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

News July 11, 2025

கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

image

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

News July 11, 2025

இறுதிக்கட்டத்தை நெருங்கும் USA உடனான வர்த்தக ஒப்பந்தம்

image

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்தியா – அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராக இவர் உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

News July 11, 2025

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

image

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

புஷ்பாவுக்கு வில்லனாகும் ஸ்ரீவள்ளி?

image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் மொத்தமாக 5 ஹீரோயின்கள் எனக் கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், லிஸ்டில் ரஷ்மிகாவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், படத்தில் ஹீரோயினாக இல்லாமல், டெரரான வில்லன் ரோலில் ரஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நெகட்டிவ் ரோலில் கலக்குவாரா ஸ்ரீவள்ளி?

News July 11, 2025

திமுக மூத்த தலைவர் மிசா மாரிமுத்து காலமானார்!

image

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா அண்ணதாசன் என்கிற மாரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்ட இலக்கிய அணித்தலைவராக இருந்த அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தொடக்க காலத்திலிருந்து கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் உழைத்த உன்னத மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார். மாரிமுத்து மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News July 11, 2025

செல்போனில் சிக்னல் பிரச்னையா? இத பண்ணுங்க

image

◆போனில் ரீசண்ட் Software அப்டேட் செய்திருக்கோமா என செக் பண்ணுங்க
◆நெட்வொர்க் Switch: போனில் செட்டிங்ஸ்-> மொபைல் நெட்வொர்க்-> SIM Management-> Switch data connection during calls-ஐ தேர்ந்தெடுக்கவும்
◆சிம் கார்டை எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் போனில் போட்டு முயற்சித்து பார்க்கவும்
◆Aeroplane Mode-ஐ OFF செய்து, சிறிது நேரத்தில் ஆன் செய்யவும்
◆போனை ஒருமுறை ‘Restart’ செஞ்சி பாருங்க.

News July 11, 2025

நாடு திரும்பிய PM மோடி.. விருதுகள் பட்டியல்!

image

8 நாள்கள் அரசுமுறை பயணமாக 5 நாடுகளுக்கு சென்ற PM மோடி நாடு திரும்பினார். கானாவின், ‘தி ஆஃபீஸர் ஆஃப் தி ஆர்டர் தி ஸ்டார் ஆஃப் கானா’, பிரேஸிலின் ‘கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’, நமீபியாவின் ‘தி ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஆன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’, டிரினிடாட்டின் ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்- டொபகோ’ ஆகிய உயரிய விருதுகளுடன் இந்தியா திரும்பியுள்ளார்.

error: Content is protected !!