India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்தில் வைத்து இந்திய அணியை வீழ்த்துவோம் என ENG ஓபனிங் வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். பும்ராவின் திறமை தனக்கு தெரியும் எனவும், ஷமியும் பும்ராவை போலவே அச்சுறுத்தலானவர், ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை கடந்துவிட்டால் தன்னால் நிறைய ரன்களை அடிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். IND vs ENG மோதும் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்க உள்ளது.
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பு விளைநிலங்கள் மனைப்பட்டாவாக மாற்றப்பட்டுவிட்டது என குறை கூறினார். முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளதாகவும், ஏரி, குளம், நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் உஸுர்நகரில் நடந்த ஒரு பலாத்கார சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா என்ற பெண், தன் தோழியை வீட்டுக்கு அழைத்துள்ளார். ரோஜா, காதல் பிரமோத் ஆகியோருடன் சேர்ந்த மது அருந்தினர். போதையில் விழுந்த தோழியை காதலன் பிரமோத் பலாத்காரம் செய்ய, அதை ரோஜா வீடியோ எடுத்துள்ளார். அடுத்த நாள் அந்த வீடியோவை காட்டி மிரட்டிய பிரமோத், தன் நண்பனின் ஆசைக்கு இணங்க சொல்ல, அந்த பெண் போலீஸை நாடியுள்ளார்.
தினசரி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கொடுப்பது போல, தினசரி மர்டர் ரிப்போர்ட் கொடுக்கப்படுவது தான் திமுக ஆட்சியின் சாதனை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்பது தெரியவில்லை என விமர்சித்தார். குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் எனக் கூறி, பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஹாரின் ஹாஜிபூரில் உள்ள வீட்டில் இரு மருமகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அமைச்சரின் மற்றொரு மருமகன் மற்றும் சகோதரி காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. மத்திய மற்றும் தெற்கு காசாவை இரண்டாக பிரித்து தங்களது கண்ட்ரோலில் கொண்டு வர இஸ்ரேல் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலையும் முடுக்கிவிட்டுள்ளது. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்காததால், தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
TNல் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார். குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக CM ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கோவையை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான சந்தோஷ் (39) நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடி தொழில் செய்து வந்த அவரை, Snake Santhosh என பலரும் அழைப்பர். குடியிருப்புப் பகுதியில் நுழைந்த பல்லாயிரக்கணக்கான பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விட்டவர். கொங்கு மண்டலத்தில் பிரபலமான சந்தோஷின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் Pixel 9a, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tensor G4 chipset உடன் இந்த மொபைல் போன் வெளியாவதால் முந்தைய தலைமுறை போன்களை விட, செயல்திறனில் அதிக வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8GB RAM 128GB, 256GB சேமிப்பு திறன் கொண்டது. இந்த போனின் ஆரம்ப விலை ₹50,000க்கு ஒரு ரூபாய் குறைவு. அடுத்த மாதம் முதல் ஃபிளப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி NTKவில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் சீட்டு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Sorry, no posts matched your criteria.