India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2-ம் உலகப் போரின் மகத்தான விமானப்படை வீரன் என்ற புகழ்பெற்ற ஜான் பேடி ஹெமிங்வே, தனது 105-வது வயதில் காலமானார். 1941-ல் ஹிட்லரின் படை பிரிட்டன் மீது பெருந்தாக்குதல் நடத்திய போது, பிரிட்டனின் விமானப்படையே (RAF) அதை தடுத்து நிறுத்தியது. அதில் முக்கிய பங்காற்றியவர் ஜான் பேடி. தொடர்ந்து பல போர்முனைகளில் இவர் பங்காற்றியுள்ளார், பலமுறை இவரது விமானம் சுடப்பட்டும் தப்பிப் பிழைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு தலித், அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய, திராவிட சித்தாந்தவாதிகளுக்கு கோபத்தை எழுப்புவதாக அறம் பட இயக்குநர் கோபி நயினார் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘அறம்’ கதைக்கு விருது வழங்கிய தி.க., அதனை நிஜ வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போது தன்னை எதிரியாக சித்தரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தி.க. வழங்கிய பெரியார் விருதை திருப்பி அளிப்பதாகவும் கோபி நயினார் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த பாஜக அரசு விரும்புவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களது மாநில உரிமையை வலியுறுத்தும் ஆடைகளை அணிந்து செல்ல எம்.பி.க்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனவும், வேறு ஆடைகளை அணிந்து வாருங்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தொகுதி மறுவரை தொடர்பான வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டுகளை எம்.பி.க்கள் அணிந்து சென்றிருந்தனர்.
மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மேற்குவங்க மாநிலம். 1909ம் ஆண்டு வங்க கலால் சட்டத்தை திருத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம், மதுக்கடைகள், மதுபான பார்களில் இனி பெண்களும் பணியாற்றலாம். பாலின பாகுபாட்டை களையும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திரிமா தெரிவித்துள்ளார்.
வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
தொடர் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள், 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 899 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ், பிப்ரவரிக்கு பிறகு முதல்முறையாக 76,348 புள்ளிகளை தொட்டது. இதேபோல், நிப்ஃடி 283 புள்ளிகள் உயர்ந்து 23,190 புள்ளிகளில் வர்த்தகமானது. மேலும், டாலருக்கு நிகராக ரூபாயில் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.86.46 ஆக உள்ளது.
18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் கடந்த ஆண்டில் மட்டும் 11,890 சாலை விபத்துகள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக 2,063 வாகன விபத்துகளும், ம.பி.,யில் 1,138 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டதுடன், சிறார்கள் வாகனங்கள் இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர்களே, நீங்களும் கவனிங்க.
ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவின் அதிபர் இப்ராஹிமின் பதிலால் சவுதி அரேபியா அதிர்ந்து போயுள்ளது. அந்நாட்டுக்கு தாங்கள் கொடுத்த நிதியில் 200 மசூதிகளை கட்டுமாறு சவுதி அரேபியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த அதிபர் இப்ராஹிம், தங்கள் நாட்டில் ஏற்கனவே அதிக மசூதிகள் இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பள்ளிகளையும், ஹாஸ்பிடல்களையும் கட்டப் போவதாக தெரிவித்துள்ளார்.
தன்னை ஒருமுறை தொடுவதற்கு ரூ.5000 தரவேண்டும் என மனைவி நிபந்தனை விதிப்பதாக கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பணம் தரவில்லை என்றால் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மனைவி மிரட்டுவதாக கூறும் ஐடி ஊழியர் ஸ்ரீகாந்த், பணம் இல்லையென்று சொன்னதால், மனைவியும் குடும்பத்தினரும் தன் மர்ம உறுப்பில் உதைத்து கொல்ல முயற்சித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.10,000க்கு எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். 20 லட்சம் லேப்டாப் வாங்க ரூ.2,000 கோடி தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தரமான மடிக்கணினியை வெறும் ரூ.10,000 எப்படி வழங்க முடியும் என வினவினார். இதற்கான நிதியை தமிழக அரசு உயர்த்தும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.