News March 21, 2025

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு… வங்கி சேவை பாதிக்கப்படாது!

image

வங்கிகளில் வாரத்திற்கு 5 நாள்கள் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். நாளை, நாளை மறுநாள் வங்கிகள் விடுமுறை என்பதால் 4 நாள்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

News March 21, 2025

76 வயதில் குழந்தை பெற்ற பெண்

image

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இந்த அதிசயம் நடந்துள்ளது. மெதின் ஹாகோஸ் என்ற பெண் தன் 76-வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அவர் இயற்கையாகவே கருத்தரித்ததாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி வைரலான நிலையில், இந்த வயதில் சோதனை குழாய் மூலம் தான் குழந்தை பெற முடியும். இயற்கையாக கருத்தரிப்பது சாத்தியமில்லை என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

News March 21, 2025

ஒலிம்பிக் கமிட்டி தலைவரான முதல் பெண்..

image

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு துறை அமைச்சர் கிர்ஸ்டி கோவெண்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நீச்சல் வீராங்கனையான இவர், ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றுள்ளார். இந்த பதவியில் அமரவுள்ள முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். கிரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையக் கூட்டத்தில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News March 21, 2025

அந்த மனசுதான் சார் கடவுள்… ❤️❤️

image

சந்தோஷத்துலயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான். அப்படியொரு சம்பவம் ஒடிஷாவுல நடந்திருக்கு. பல வருஷமா விளையாட சரியான கிரவுண்ட் இல்லாத கிராமத்து பசங்களுக்காக தன்னோட 5 ஏக்கர் நிலத்த தானமா கொடுத்திருக்காங்க மூதாட்டி சபித்ரி மஜ்ஹி(95). அந்த கிராமத்துல இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகணுங்கிறதுதான் அவரோட ஆசை. அத அந்த கிராமத்து பசங்க நிறைவேத்துவாங்கன்னு நம்புவோம்!

News March 21, 2025

சிக்னல் கோளாறு: புறநகர் ரயில் சேவை பாதிப்பு

image

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறநகர் செல்லும் ரயில்கள் தாமதமான காரணத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் சிக்னல் காரணமாக நடுவழியில் நிற்பதால், புறநகர் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News March 21, 2025

திருப்பதியில் தமிழக, கர்நாடக பக்தர்கள் மோதல்

image

திருப்பதி கோயிலில் தமிழக, கர்நாடக பக்தர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கும் அறைக்காக கர்நாடக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கும் கோவையை சேர்ந்த பக்தர்களுக்கும் இருக்கையில் அமருவது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதில் கோவை பக்தர் கண்ணாடி பாட்டிலால் தாக்கியதில் கர்நாடக பக்தர்கள் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2025

மிருகமாய் மாற்றும் போதை

image

ராஜஸ்தான் மாநிலம் மக்ரானாவில் நடந்துள்ள ஒரு சம்பவம், போதை எந்த அளவுக்கு ஒருவனை மிருகமாக மாற்றும் என்பதை காட்டுகிறது. குடிபோதை தலைக்கேற, தன் காம இச்சைக்கு 15 வயது தங்கையையே வேட்டையாடியிருக்கிறான் உடன் பிறந்த அண்ணன். இதை அச்சிறுமி பெற்றோரிடம் சொல்ல, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், உறவினர் மூலம் போலீஸில் புகார் அளிக்க, இப்போது அவன் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்துள்ளது.

News March 21, 2025

இது தெரியாம வேஃபர்ஸ் சாப்பிடுறீங்களா?

image

சமீபத்துல வேஃபர்ஸ்ல புழு இருந்ததா செய்தி ஒன்று வந்துச்சு. அத நீங்க பாத்தீங்களானு தெரியல. ஆனா பிரச்னை வேஃபர்ஸ்ல புழு இருக்கறது மட்டுமில்ல. அத சாப்படுறதுனால உடலில் பல பிரச்னைகள் வருமாங்க. ஏன்னா அதுல வெறும் சர்க்கரையும், கொழுப்பும் மட்டும்தான் இருக்கு. அதுனால குழந்தைகள் கேட்டுட்டாங்கனு வாங்கி கொடுக்குறத நிறுத்தீக்கோங்க. பாக்கெட் பண்ணி வைக்கிற பொருட்கள கொடுப்பதை தவிர்ப்பதே நல்லது.

News March 21, 2025

ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து: HC உத்தரவு

image

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

News March 21, 2025

ஐபிஎல் களத்தில் அதிக சிக்சர் பறக்கவிட்டது இவர்களே…!

image

பறக்கும் பந்துகள், சிதறடிக்கப்படும் பந்துவீச்சு என பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசியவர் கிறிஸ் கெய்ல். யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் அவர், 142 போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். 2ம் இடத்தில் 280 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். கோலி( 272), தோனி( 252), டி வில்லியர்ஸ்( 251) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

error: Content is protected !!