News March 22, 2025

மார்ச் 22: வரலாற்றில் இன்று!

image

*1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
*1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
*1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
*1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்கு மிக அருகில் வந்தது.
சிறப்பு நாள்:
*உலக தண்ணீர் தினம்

News March 22, 2025

பாஜக இன்று கருப்புக் கொடி போராட்டம்

image

தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா, கர்நாடகா மாநில அரசியல் தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் CM <<15842933>>ஸ்டாலினை<<>> கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று 10AMக்கு, பாஜகவினர் அவர்களது வீடுகளுக்கு முன்னாள் கருப்புக்கொடி ஏந்தி போராடுவார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணியின் நலனுக்காக TN மக்களின் நலனுக்கு எதிராக CM செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 214
▶குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
▶பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

News March 22, 2025

கல்வி நிறுவனங்களுக்கு UGC எச்சரிக்கை

image

அங்கீகாரம் இல்லாமல் உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது. மேலும், அங்கீகாரமில்லாமல் கல்வி நிறுவனங்கள், பல்கலை.கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள் அனைத்தும், உயர்கல்வி அந்தஸ்தைப் பெறாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் <>இந்த<<>> இணையதளத்தில் விவரங்களை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 22, 2025

இன்றைய (மார்ச் 22) நல்ல நேரம்

image

▶மார்ச் – 22 ▶பங்குனி – 08 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 AM – 03:00 AM ▶குளிகை: 06:00 AM- 07:30 AM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News March 22, 2025

DELIMITATION: சென்னையில் பல மாநில CMகள் முகாம்

image

மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. CM ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனையில் பங்கேற்க கேரளா, தெலங்கானா, பஞ்சாப் CMகள் கர்நாடகா, ஒடிசா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் TN வந்துள்ளனர். இன்றைய ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 22, 2025

எந்த நிதியில் மடிக்கணினி? அண்ணாமலை

image

எந்த நிதியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்பதை TN அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு மடிக்கணினி வழங்க ₹2,000 கோடி ஒதுக்கப்படும் என TN பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதனை சுட்டிக்காட்டிய அவர், நடப்பாண்டு மடிக்கணினி வழங்க முடியாது எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், எதற்காக இந்த வெற்று அறிவிப்பு எனவும் வினவியுள்ளார்.

News March 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 22, 2025

சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

image

சென்னை- மும்பை அணிகள் வரும் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மோதும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.30 மணி முதல் 6.50 வரை சேப்பாக்கம் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அனிருத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இந்த போட்டி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

error: Content is protected !!