News March 22, 2025

ஸ்டாலின் கூட்டத்தில் மொழிபெயர்ப்பு கருவிகள்!

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக CM ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேரளா, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பல மொழிகளில் தலைவர்கள் பேசுவார்கள் என்பதால், ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகியவற்றில் மொழிபெயர்க்க கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

News March 22, 2025

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்

image

இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு தற்போது ஆபத்து வந்திருப்பதாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குழு கூட்டத்தில் CM ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இதனால், மாநிலங்களால் நிதியை கேட்டுப் பெற முடியாது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருத முடியாது. அதற்காகவே இந்த போராட்டம் என விளக்கினார்.

News March 22, 2025

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு!

image

முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு நடத்தியது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட குழு முல்லை பெரியாறு அணைக்கு வந்தது. தொடர்ந்து பேபி அணை, மதகுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் பின் குமுளியில் இன்று மாலை கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், தமிழக விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.

News March 22, 2025

வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: ஸ்டாலின்

image

வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது என CM மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், #Fair Delimitationஐ உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாள். அனைத்து மாநில CMகளையும், அரசியல் தலைவர்களையும் இந்த கூட்டத்திற்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

News March 22, 2025

டி.கே. சிவகுமாருக்கு எதிராக தமிழிசை ஆர்ப்பாட்டம்!

image

சென்னையில் தனது வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி தமிழிசை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ள கர்நாடகா DY CM டி.கே. சிவகுமார், தமிழகம் வந்திருப்பதை கண்டித்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக CM ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில், டி.கே. சிவகுமார் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

ஐபிஎல்: சென்னை ரசிகர்களுக்கு நாளை டபுள் விருந்து!

image

IPL திருவிழா இம்முறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப் போட்டி நடக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் கண்கவர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில், நாளை CSK – MI மோதும் EL CLASSICO போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தல ஹெலிகாப்டர் ஷாட்டையும் காண வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால், ரசிகர்களுக்கு டபுள் விருந்துதான்!

News March 22, 2025

2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22) காலை நேர வர்த்தகப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனையாகிறது.

News March 22, 2025

கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

image

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சை காசாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் (40) கடந்த 13ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஆனால், பிரகாஷை மனைவி நாகலட்சுமியும், அவரது கள்ளக்காதலன் வீரக்குமாரும் சேர்ந்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.

News March 22, 2025

இலங்கை செல்லும் பிரதமர் மோடி!

image

அரசுமுறை பயணமாக வரும் 5ஆம் தேதி PM மோடி இலங்கை செல்லவுள்ளார். அப்போது, திரிகோணமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

News March 22, 2025

கீப்பிங்கில் முதலிடம்: ‘தல’ தோனிக்கு விசில் போடுங்க!

image

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சென்னை அணியின் தல தோனி தான் முதலிடம் பிடித்திருக்கிறார். 264 போட்டிகளில் கீப்பராக செயல்பட்டு 42 ‘ஸ்டெம்பிங்’, 148 ‘கேட்ச்’ பிடித்து 190 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வயசானாலும் கீப்பிங்கில் கலக்கி வரும் தல தோனிக்கு விசில் போடுங்க!

error: Content is protected !!