News March 22, 2025

டிரம்புக்காக பிரார்த்தனை செய்த ரஷ்ய அதிபர்

image

அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் காதில் குண்டு பட்டு காயமடைந்தார். அப்போது டிரம்ப் நலம் பெற வேண்டி தேவாலயம் சென்று ரஷ்ய அதிபர் புதின் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த தகவலை டிரம்பின் உயர்மட்ட தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புதின் செய்ததை அறிந்தவுடன் டிரம்ப் நெகிழ்ந்து போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 22, 2025

வேலை பார்க்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: SC

image

கணவருக்கு இணையாக வேலை பார்த்து ஊதியம் பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட SC மறுத்துவிட்டது. கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி, ஜீவனாம்சம் கோரி மனு தொடுத்திருந்தார். அதற்கு கணவர் தரப்பில், மனைவியும் தன்னைப் போல ரூ.60,000 சம்பளம் பெறுகிறார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட SC, கணவருக்கு இணையாக மனைவி சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.

News March 22, 2025

திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

image

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

300 செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

image

பயனர்களின் தகவல்களை திருடியதாக 300 ஆப்களை PlayStoreலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. தனிப்பட்ட தகவல்களுடன் கிரெடிட் கார்டு உள்ளிட்ட நிதி தொடர்பான தகவல்களை மோசடியாளர்களுக்கு அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை மருத்துவம், QR ஸ்கேனர், வால்பேப்பர் செயலிகள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், ‘Android 13 OS’ பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 22, 2025

ஐபிஎல் தொடக்க விழாவில் இத்தனை நட்சத்திரங்களா?

image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஐபிஎல் தொடக்க விழா மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கவுள்ளது. நடிகைகள் திஷா பட்டானி, ஷ்ரதா கபூர், நடிகர் வருண் தவான், பாடகி ஸ்ரேயா கோஷல், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இதில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

News March 22, 2025

தாமதமாக திறக்கப்படும் ‘இட்லி கடை’?

image

அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை இரண்டும் ஏப். 10ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அஜித் உடனான மோதலில் இருந்து தனுஷ் பின்வாங்கியதாக தெரிகிறது. ‘இட்லி கடை’ படப்பிடிப்பு இன்னும் 20% இருப்பதால், ரிலீசாவதில் தாமதம் ஏற்படும் என்றும், புதிய ரிலீஸ் தேதி 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 22, 2025

IPL: இன்றைய போட்டி நடக்குமா? இல்லை நடக்காதா?

image

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று IPL முதல் போட்டி நடக்கிறது. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படலாம் என செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா வானிலை மையம் தரப்பில், மழையால் இன்றைய போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருப்பதாகவும், சூரியன் தென்படுவதாகவும் அது கூறியுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

News March 22, 2025

REWIND: முதல் ஐபிஎல் போட்டி… வரலாறு ரிப்பீட் ஆகுதா?

image

ஐபிஎல் தொடர் கோலாகலமாக இன்று தொடங்க இருக்கிறது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகள்தான், முதன்முதலில் ஐபிஎல் 2008ல் தொடங்கியபோது முதல் போட்டியிலும் விளையாடின. அந்த போட்டியில், கொல்கத்தா அணியில் களமிறங்கிய மெக்கல்லம் ருத்ரதாண்டவம் ஆடி 158 ரன்கள் அடித்ததை மறக்க முடியுமா?… RCB அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி KKR வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்?

News March 22, 2025

நடிகை பாவனா விவாகரத்து? விளக்கம்

image

பிரபல நடிகை பாவனா கடந்த 2018ஆம் ஆண்டில் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மைக் காலமாக அவர் தனது கணவருடன் இருக்கும் புகைபடங்களை பதிவிடுவதில்லை. இதை வைத்து 2 பேரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள பாவனா, அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், சிலர் பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த தெரு நாய்

image

நம்ம ஊரில் தெரு நாய்களுக்கு சோறு போடவே ஆள் இருக்காது. ஆனால் தானேவில் நோய்வாய்ப்பட்டிருந்த தெரு நாய்க்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கனடாவில் இருந்து தனது பெற்றோரை பார்க்க வந்த சலீல் நவ்காரே, பரிதாபமான நிலையில் இருந்த ராணி என்ற தெரு நாயை கண்டுள்ளார். உடனடியாக NGO மூலம் நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். பின்னர் தேவையான அனுமதி பெற்று ராணியை தானேவில் இருந்து Toronto அழைத்துச் சென்றார்.

error: Content is protected !!