India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, மதுரை, தி.மலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. மேலும் தகுதியுடைய விடுபட்ட பெண்களும் விரைவில் அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1,000 வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பினி கிராமத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தொடர்பாக வினோத வழக்கம் ஒன்று நீண்ட நாட்களாக பின்பற்றப்படுகிறது. திருமணமான பிறகு புதுமணப்பெண் 7 நாட்களுக்கு ஆடையின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும், அதேபோல், புது மாப்பிள்ளை மது அருந்தக் கூடாதென்பதே அந்த வழக்கம் ஆகும். இந்த வழக்கத்தை கடைபிடித்தால் 2 பேருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிட்டும் என நம்பப்படுகிறது.
மநீம-க்கு புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளை கமல் நியமித்துள்ளார். ஆதிதிராவிடர் அணி மாநில செயலாளராக சிவா, மகளிர் அணி மாநிலச் செயலாளர்களாக முகாம்பிகா ரத்தினம், சினேகா மோகன், பத்மாவதி, கலையரசி நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்களாக தனபாலன் (அம்பத்தூர்), பாலமுருகன் (வேளச்சேரி), பாஸ்கர் (கும்மிடிபூண்டி), சீனுவாசன் (எழும்பூர்), அப்துல் முசாபர் (தி.கேணி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணவீக்கம், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும், இவை அனைத்தையும் இந்தியா தவிடுபாெடியாக்கி உள்ளது. 2015-2025 வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 2.4 டிரில்லியன் டாலரில் இருந்து 4.3 டிரில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. இது 105% வளர்ச்சி. இதே வேகத்தில் சென்றால் இந்தாண்டில் ஜப்பானையும், 2027இல் ஜெர்மனியையும் இந்தியா முந்திவிடும் என IMF கணித்துள்ளது.
நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நந்தி நதைத்வா பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்கா, சாம்பியா, காங்கோ, கென்யா போன்ற ஆப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 25 ஆண்டுகளுக்கு மேல் அந்நாட்டின் உயரிய பதவிகளில் இருந்த அவர் மக்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்கிறார். முன்னாள் துணை அதிபராகவும் நெடும்போ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட் ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்நிலையில், ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். ரூ.299-க்கு மேல் இருக்கும் பிளான்களில் ரீசார்ஜ் செய்திருந்தால் ஹாட் ஸ்டாரில் ஃப்ரீயாக ஐபிஎல் போட்டிகளை காணலாம். ஜியோ சினிமா தளத்தில் ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பட்ட நிலையில், தற்போது ஹாட் ஸ்டாரும், ஜியோ சினிமாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
CSKவின் நட்சத்திர வீரராக இருந்த டுவைன் பிராவோ மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் வல்லவர். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிராவோ பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கியதால் இந்திய ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக யாருக்கும் எப்போதும் பயப்பட்டதில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு தாங்களே எஜமானர்கள், வேறு யாரும் இல்லை என்றார். அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்குவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை புதிய அறிவுறுத்தலை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, கேன்களை 50 முறைக்கு மேல் தண்ணீருக்கு பயன்படுத்தக் கூடாது, அழுக்கடைந்த, கீறல் விழுந்த மற்றும் சூரிய ஒளியில் நேரடியாக இருக்கும் கேன்களை பயன்படுத்தக் கூடாது. உடல்நலத்துக்கானது என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.