News March 22, 2025

பாலியல் தொல்லை: மாமனாரை அடித்துக் கொன்ற மருமகள்!

image

அனைவரும் அஞ்சி நடுங்கும் படியான ஒரு சம்பவம் உ.பி. காசியாபாத்தில் நடந்துள்ளது. கணவரை இழந்த ஆர்த்தி என்ற பெண், குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மருமகள் என்றும் பாராமல் அவருக்கு மாமனாரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ஆர்த்தி, மாமனாரை நிர்வாணமாக்கி கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். ஆர்த்தியை போலீஸ் கைது செய்துள்ளது.

News March 22, 2025

சரவெடியாய் வெடித்த சால்ட்.. அதிரடி காட்டும் RCB!

image

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வெளுத்து வாங்கினர். பவர்பிளே முழுவதும் பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்தன. அதிரடியாக விளையாடிய சால்ட், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவர்பிளேயில் மட்டும் பெங்களூரு அணி 80 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

News March 22, 2025

IPL 2025இல் விளையாடும் வயதான வீரர்கள்

image

IPL 2025ஆம் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இப்போட்டித் தொடரில் 5 வயதான வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்கள் யார்-யார் என பார்க்கலாம். 1) தோனி (வயது 43), சிஎஸ்கே அணி 2) டூ பிளசிஸ் (வயது 40) – டெல்லி கேபிடல்ஸ் 3) ரவிச்சந்திரன் அஸ்வின் (38)- சிஎஸ்கே 4) ரோஹித் ஷர்மா (37) – மும்பை இந்தியன்ஸ் அணி 5) மொயின் அலி (37) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

News March 22, 2025

வீட்டில் பணம் தங்காததற்கு இந்த 5 பழக்கங்களே காரணம்

image

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களும் காரணம் என்கிறது வாஸ்து. 1)வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2)கடவுளுக்கு உணவு படைக்கும்முன் அதை ருசிக்கக் கூடாது 3)மாலையில் (சூரிய அஸ்தமனம் முன்) விளக்கேற்ற கூடாது. 4)இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5)பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.

News March 22, 2025

சம்மரில் பவர் கட் பிரச்னை வருமா?… அமைச்சர் விளக்கம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

News March 22, 2025

தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

image

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

News March 22, 2025

அரசு சொத்தை சேதம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா?

image

அரசு சொத்தை சேதப்படுத்தினால் என்ன தண்டனை அளிக்கப்படும் என BNS சட்டத்தின் 324 (3), (4), (5) ஆவது பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்தை சேதப்படுத்தினால் ஓராண்டு வரை சிறை (அ) அபராதம் (அ) 2 தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சொத்தை சேதப்படுத்தினால் 2 ஆண்டு வரை சிறை, ரூ.1 லட்சம் சொத்தை சேதப்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை எனக் கூறப்பட்டுள்ளது.

News March 22, 2025

எப்பவும் ‘நைட்கவுன்’… கடுப்பான இளம்பெண்

image

மாமியார் வீட்டில் பல பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதை நாம் பார்த்திருப்போம். குஜராத்தில் அப்படி இன்னல்களை சந்தித்த 21 வயது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாள் முழுவதும் நைட் கவுன் மட்டுமே அணிய வேண்டும் என கணவரின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், தூங்குவதற்கு முன்பு கணவர் கால் அமுக்கி விடச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News March 22, 2025

மவுசு குறையாத ட்விட்டர் லோகோ.. ₹30 லட்சத்துக்கு ஏலம்..

image

ட்விட்டர் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது அதன் நீல நிற பறவை லோகோதான். ஆனால் எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கிய பின், பெயர் மற்றும் லோகோவை மாற்றினார். San fransico-வில் இருந்த ட்விட்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த, நீல நிறப் பறவை லோகோ, தற்போது ₹30.09 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. 240 கிலோ கொண்ட எடை, 12 அடி உயரம் கொண்டதாக லோகோ இருந்துள்ளது.

News March 22, 2025

பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

image

18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரஹானே 56 ரன்களும், நரேன் 44 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெல்லப் போவது யார்?

error: Content is protected !!