India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளைய ஐபிஎல் போட்டியில் 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்த 2 போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காண முடியும்.
தமிழகம் மத்திய அரசுக்கு அதிக வரி தருகிறது, மத்திய அரசு தமிழகத்துக்கு என்ன தருகிறது என்ற வாதமே தவறானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு நிதி தருவதில் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை என்றார். தமிழ்நாட்டில் எவ்வளவோ செய்வதற்கு இருந்தாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என சிலர் திசை திருப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜாங் ஜென்யுவான், தனது வீட்டு வேலைகளை செய்ய ரோபோவை வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கு ஒரு நாள் வாடகை ரூ.1.15 லட்சமாம். சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது மட்டுமின்றி ரோபோவுடன் ஜாங் டேட்டிங்கும் செய்கிறாராம். இப்போது எனக்கு காதலி கூட தேவையில்லை என அவர் வேடிக்கையாக கூறுகிறார்.
தற்போதைய MLA-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவால் மாநிலங்களவைக்கு 4 MP-க்களை தேர்வு செய்து அனுப்ப முடியும். ஆனால் அதிமுகவால் 2 MP-க்களை அனுப்ப முடியுமா என்றால் கேள்விக்குறியே. ஏனெனில் மாநிலங்களவை MP-யை தேர்வு செய்ய தலா 34 MLA-க்கள் என 68 MLA-க்கள் ஆதரவு தேவை. அதிமுக தரப்பில் 65 MLA-க்களே உள்ளனர். இதனால் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இன்னொருவரை தேர்வு செய்ய முடியாது.
பாமகவிடம் 5 MLA-க்கள், பாஜகவிடம் 4 MLA-க்கள் உள்ளனர். இந்த 2 கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி ஆதரவு அளித்தால் 2ஆவது MP-யை அதிமுகவால் மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். இதில் பாஜகவிடம் ஆதரவு கோரினால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டியிருக்கும். பாமகவிடம் ஆதரவு கோரினால், MP பதவியை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அதிமுக என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.
கேஜிஃஎப் படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் யஷ். அவரது நடிப்பில் கேஜிஃஎப் 2 படமும் வெளியாகி ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது, அவர் டாக்ஸிக் என பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். யஷ்ஷின் 19வது படமான இது, அடுத்தாண்டு மார்ச் 19ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகின்றனர்.
மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில்: *AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்சனைகள் வரலாம் *A, B இரண்டு குரூப்புக்கும் டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். * O நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு.
இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
திருமணத்தை பதிவு செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் www.tnreginet.gov.in இணையதளத்தில் பதிவாளர் அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட் முன்பதிவு செய்ய வேண்டும். முகவரி, வயது ஆவணம், செல் எண், சாட்சிகள் விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, நமது திருமணம் நடைபெற்ற பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தொடர்ந்து பணத்தை கட்டி, REFERENCE எண் பெற வேண்டும். பிறகு தேர்வு செய்த நேரத்தில் 2 சாட்சிகள், திருமண அழைப்பிதழ், வயது சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். திருமண தம்பதிகள் மட்டும் அனைத்து ஒரிஜினல் சான்றுகளும் வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தும் சரியாக இருந்தால், உடனே அன்றைய தினத்தில் திருமண பதிவு சான்று அளிக்கப்படும். இல்லையெனில் சில நாட்கள் ஆகும்.
Sorry, no posts matched your criteria.