India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தனது கணவர் நாராயண மூர்த்தி சொன்னதற்கு அவரது மனைவி சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவர் அப்படி நேரம் பார்க்காமல் உழைத்ததால்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்க முடிந்ததாகவும், இன்ஃபோசிஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் கடின உழைப்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்வத்துடன் வேலை செய்தால் நேரம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.
*1931 –காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். *1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது. *1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். *1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. *உலக வானிலை நாள்
ஆஸ்திரேலியா வீரர்கள் என்றாலே களத்தில் மற்றவர்களை வம்புக்கு இழுப்பதையே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் மாறுபட்டவர் டேவிட் வார்னர். பேட்டிங் மட்டுமல்லாமல், ஜாலியாக ரிலீஸ் போட்டு கலக்குவதிலும் மன்னன் வார்னர். ராபின்ஹூட் என்ற தெலுங்கு படத்தில் தற்போது வார்னர் நடித்துள்ளார். இதற்காக அவர் ₹4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வார்னரை நடிகராக பார்க்க ஆசையா?
நடிகர் சுஷாந்த் சிங் மரணம், தொடர்பான அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தற்கொலைக்கு எந்த தூண்டுதலும் இல்லை என தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2020ல் சுஷாந்த் சிங் தன் இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சுஷாந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 215 ▶குறள்: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ▶பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
வெங்காய ஏற்றுமதி மீதான 20% வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு மானாவாரி பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகம். உற்பத்தி அதிகரிப்பால் நாசிக் வெங்காயத்தின் விலை சந்தையில் சரிந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மத்திய அரசு ஏற்றுமதி வரியை ரத்து செய்துள்ளது.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தமிழக வீரர் சங்கர் சுப்பிரமணியன் தோல்வியடைந்தார். பிரான்சை சேர்ந்த கிறிஸ்டோ போபோவ்வுடன் மோதிய அவர் 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரர் அன்டோசனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த சங்கர் அங்கு ஜொலிக்க தவறிவிட்டார்.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுதாகொங்கராவுடன் சிவா இணைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனிடையே படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. 2026 பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நடுவில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரைக்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.