News March 23, 2025

திமுக அரசு நல்லா குறட்டை விட்டு தூங்குது: அன்புமணி

image

மதுரை தனக்கன்குளத்தில் நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 23, 2025

49 வயது இயக்குநரை டேட் செய்யும் பவி டீச்சர்?

image

பவி டீச்சராக என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை பிரிகிதா தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா(49) என்பவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி வைரலாகின. ஆனால், அவை உண்மையில் வதந்தி எனக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் இயக்கிய பெத்தகபு -1 என்ற தெலுங்கு படத்தில் பிரிகிதா நடித்துள்ளார். அதிலிருந்து அவர்களுக்குள் பழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தற்போது வரை இருவரும் எதுவும் பதிலளிக்கவில்லை.

News March 23, 2025

இஃப்தார் நோன்பு திறக்க விஜய் உத்தரவு!

image

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கட்சி நிர்வாகத்திற்காக தவெகவில் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தனை இடங்களிலும் முறைப்படி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கட்சியினர் தவறாமல் நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 23, 2025

போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்.. அரசுக்கு நெருக்கடி

image

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறுகையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன்வசம் வைத்திருந்த அரசு ஊழியர் வாக்கு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார் என்று விமர்சித்துள்ளார்.

News March 23, 2025

‘PM கிசான்’ ₹6,000 பெறும் விவசாயிகளின் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் ‘PM Kisan’ திட்டப் பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனுடன் அரசு கள அலுவலர்கள் (அ) இ-சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 9,59,25,578 பேரும், தமிழகத்தில் 21,94,651 பேரும் பயன்பெறுகின்றனர்.

News March 23, 2025

திருப்பதியில் மீண்டும் பிளாஸ்டிக்கா?

image

திருமலை திருப்பதியில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் புழக்கத்திற்கு வந்தன. அண்மையில் வரிசையில் காத்திருந்த இரு மாநில பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கண்ணாடி பாட்டில்களை வைத்து தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் அலர்ட் ஆன TTD, மக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகளை பயன்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறது.

News March 23, 2025

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் AI பாடம்

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த பாடத்திட்ட மாற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு 15 நாட்களில் முடிவடையும் எனவும், 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 23, 2025

IPL 2025: கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்கூருக்கு அடித்த லக்!

image

இந்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் விளையாட மாட்டார் எனப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது ஷர்துல் தாக்கூரை ₹2 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. IPL மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத ஆல் ரவுண்டர் தாக்கூர், லக்னோ அணியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

News March 23, 2025

நடிகர் மரணம்.. 4 ஆண்டுக்கு பின் நிம்மதியடைந்த நடிகை

image

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நீட்டித்து வந்த மர்மம் விலகியுள்ளது. சுஷாந்த்தை காதலில் வீழ்த்தி, நடிகை <<15855388>>ரியா <<>>சக்கரவர்த்தி பல கோடி மோசடி செய்ததாக விமர்சித்த நெட்டிசன்கள் #ArrestRheaChakraborty என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்தனர். இதனையடுத்து, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ரியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுஷாந்த் மரணத்திற்கும், ரியாவுக்கும் தொடர்பில்லை என சிபிஐ கூறியுள்ளது.

News March 23, 2025

நிர்மலா சீதாராமனுக்கு சவால் விடுத்த சேகர்பாபு!

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். முடிந்தால் அவரை TN நிதியமைச்சருடன் வாதம் செய்ய சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ள சேகர்பாபு, மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என குற்றஞ்சாட்டினார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி என மனசாட்சி இல்லாமல் கூறுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!