News March 24, 2025

இதை செய்தால் 60% மின்சாரத்தை சேமிக்கலாம்!

image

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் AC பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், மின்சாரப் பயன்பாடும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், 5 Star தரம் வாய்ந்த ACகளைப் பயன்படுத்தினால் 60% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ACக்களை பயன்படுத்தினால், 40-50% அதிக மின்சாரம் செலவாகும் எனவும், 24°Cல் ACயை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர்.

News March 24, 2025

10 நாட்களில் புற்றுநோய்களை கண்டறிய பரிசோதனை: மா.சு

image

பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய அடுத்த 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் முழு பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. சட்டப்பேரவையில் இதனை தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசியும் செலுத்தப்படும் என்றார். இதற்காக தமிழக அரசு ₹37 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

News March 24, 2025

PAN கார்டு 2.0 திட்டம் தொடக்கம்

image

PAN கார்டு 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பான ஆவணம். இனிமேல், நீங்கள் PAN எண்ணுக்கு விண்ணப்பித்தால், ATM கார்டுக்கு நிகரான இந்த PAN 2.0 உங்களுக்கு வழங்கப்படும். இதில், QR CODE மற்றும் சிப் இருக்கும். இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாப்பதில், இந்த கார்டு முக்கியப் பங்கு வகிக்கும். இந்த கார்டை நீங்கள் இலவசமாகப் பெறலாம். அதேநேரம், பழைய PAN கார்டும் செயல்படும்.

News March 24, 2025

DMK vs ADMK: அன்று நண்பர்கள் இன்று எதிரிகள்.. 22 பேர் பலி

image

மதுரையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஆம்! சினிமாவில் வரும் காட்சிகள் போல், நண்பர்களாக இருந்த குருசாமி திமுகவிலும், ராஜபாண்டி அதிமுகவிலும் 22 ஆண்டுகளுக்கு முன் இணைந்தனர். அதன்பின் நண்பர்களாக இருந்த இரு குடும்பமும் அரசியல் எதிரியாக மாறியுள்ளன. அப்படி, கடந்த 2003 முதல் 2025 வரை இருதரப்பிலும் சுமார் 22 பேர் அரசியலுக்காக பலியாகியுள்ளனர்.

News March 24, 2025

Netflix வெப் சீரியஸ் மோசடி.. இயக்குநர் கைது

image

Netflix-யிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்த ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற வெப் சீரிஸை இயக்குவதற்காக Netflix கொடுத்த 22 மில்லியன் டாலர் பணத்தில், ஒரு எபிசோட் கூட எடுக்காமல், சொகுசான கார்கள், ஆடம்பரமான வீடுகளை வாங்கி செலவழித்துள்ளார். இதுதொடர்பான, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

News March 24, 2025

ஜெஃப் பெசோஸூக்கு விரைவில் திருமணம்

image

Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. கோடை காலத்தில் அவர், தனது காதலி லாரன் சான்செஸை கரம் பிடிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தாலியின் வெனிஸ் நகரில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இத்தம்பதியினருக்கு 2023ல் நிச்சயதார்த்தம் நடந்தது. பெசோஸ் தனது முதல் மனைவியை 2019ல் விவாகரத்து செய்தார்.

News March 24, 2025

அங்கன்வாடியில் 16,897 புதிய வேலை: அமைச்சர் கீதா

image

அங்கன்வாடிகளில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 16,897 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளுக்கு 7,900 புதிய பணியாளர்கள் மற்றும் சத்துணவு கூடங்களுக்கு 8,997 சமையலர்கள் நியமனம் தொடர்பாக கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News March 24, 2025

பிரதமரை சந்திக்க முடிவு.. முதல்வர் விளக்கம்

image

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்புக்கு ஏதிராக நடந்த கூட்டுக் குழு கூட்டம், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News March 24, 2025

ஹர்பஜன் சிங்கை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. ஏன்?

image

SRHக்கு எதிரான ஆட்டத்தில் 18வது ஓவரை RR வீரர் ஆர்ச்சர் வீசினார். அப்போது ஆர்ச்சரின் பந்துகளை கிளாசன் பவுண்டரிகளாக விளாசினார். Commentary-ல் இருந்த ஹர்பஜன், லண்டனில் ‘ப்ளாக் டாக்ஸி’ மீட்டர் போல் ஆர்ச்சரின் மீட்டரும் ஏறிக்கொண்டே செல்கிறது என விமர்சித்தார். நிறத்தை கேலி செய்யும் வகையில் அவர் பேசியதற்கு கண்டனங்கள் குவிகின்றன. Commentary-ல் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

News March 24, 2025

மார்ச் முடிவதற்குள் காரை வாங்கிவிடுங்கள்!

image

ஏப்ரல் முதல் கார்களின் விலை உயரப்போகிறது. மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா, ஹுண்டாய் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை 3% முதல் 4% வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3% வரை அதிகரித்ததால், இறக்குமதி பொருட்கள் விலை உயர்வை சந்தித்தன. இதன் காரணமாகவே கார்களின் விலையும் வேகம் எடுத்திருக்கின்றன. மார்ச் முடிவதற்குள் காரை வாங்கிவிடுங்கள்!

error: Content is protected !!