News March 26, 2025

திருஷ்டி தோஷம் போக்கும் திருநீறு

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், குடும்ப நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டாம். ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.

News March 26, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶ மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள் ▶ உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது ▶ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது ▶ அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.

News March 26, 2025

மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

image

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

News March 26, 2025

மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

image

1964 – வட அமெரிக்காவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 125 பேர் உயிரிழந்தனர்.
1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2016 – லாகூரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலியானார்கள்.

News March 26, 2025

ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

image

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

News March 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

News March 26, 2025

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

image

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் அத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாகவும் தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.

News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

News March 26, 2025

இன்றைய (மார்ச்.26) நல்ல நேரம்

image

▶மார்ச் – 26 ▶பங்குனி – 12 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.42

News March 26, 2025

அச்சச்சோ அத மறந்துட்டனே… பாதியில் திரும்பிய விமானம்!

image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம். இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.

error: Content is protected !!