News March 27, 2025

அடுத்த ஆட்டத்துக்கு தயாரான ‘டிராகன்’…!

image

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் முதலிடத்தில் இருக்கிறார். ‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து LIK படத்தில் நடித்துவரும் அவர், மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். சுதா கொங்கராவின் உதவி இயக்குநர்களில் ஒருவரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.

News March 27, 2025

வக்ஃப் மசோதாவை கண்டித்து பேரவையில் இன்று தீர்மானம்

image

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த மசோதாவை கைவிடக் கோரும் தீர்மானத்தை இன்று பேரவையில் முதல்வர் கொண்டு வரவுள்ளார். இந்த மசோதாவுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 27, 2025

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

image

பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம், பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.

News March 27, 2025

நிர்மலா சீதாராமனை சந்தித்த ஜி.கே. வாசன்

image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இபிஎஸ் மற்றும் அமித்ஷா சந்திப்புக்கு இணைப்பு பாலமாக ஜி.கே.வாசன் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.

News March 27, 2025

சம்பவம் செய்ய ரெடியான ‘குட் பேட் அக்லி’…!

image

அஜித் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என அதன் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாள் வசூலை இந்த படம் முறியடிக்கும் என விநியோகஸ்தர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முறியடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

News March 27, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.

News March 27, 2025

14 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவு

image

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் 14 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவடைந்துள்ளது. மகாதேவ் சூதாட்ட ஊழல் தொடர்பாக அவரின் இல்லத்தில் காலையில் தொடங்கிய சிபிஐ சோதனை இரவு வரை நடைபெற்றது. இதே வழக்கில் 16 நாட்களுக்கு முன் பாகேல் மற்றும் அவருடைய மகன் சைதன்யா வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

image

1955 – ஈழத்துக் கவிஞர் முல்லையூரான் பிறந்த தினம்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1977 – அமெரிக்காவில் விமான விபத்தில் 583 பேர் உயிரிழந்தனர்.
2009 – இந்தோனேசியாவில் அணை உடைந்ததில் 99 பேர் பலியானார்கள்.

News March 27, 2025

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

image

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News March 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

error: Content is protected !!