News August 9, 2025

MGR-யை அவமதிக்கும் நோக்கமில்லை: திருமாவளவன்

image

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என <<17349030>>திருமாவளவன்<<>> தெரிவித்தார். இதற்கு <<17351092>>அதிமுகவினர் கடும் எதிர்ப்பு<<>> தெரிவித்தனர். இதுபற்றி பேசிய திருமா, தமிழக அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கியது என்ற உரையில் MGR-யை குறிப்பிட்டனே தவிர, அவரை அவமதிக்கும் நோக்கமில்லை என்றார். MGR-யை ஒரு சாதிக்குள் சுருக்கவில்லை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.

News August 9, 2025

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

TN அரசின் கல்வி கொள்கைக்கு கமல் வரவேற்பு

image

TN அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது பதிவில், மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கம் செய்திருப்பதும், அநீதியான நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை என புகழ்ந்துள்ளார்.

News August 9, 2025

கவர்னர் இல.கணேசனுக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், அவரது சென்னை வீட்டில் நேற்று வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்போலோ ஹாஸ்பிடலில் ICU பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக மூத்த தலைவராக அறியப்படும் அவர், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கவர்னராக இருந்துள்ளார்.

News August 9, 2025

பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: ரஷ்மிகா

image

நடிகை ரஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது என பகீர் புகார் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இது தன்னை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News August 9, 2025

₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

image

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

ராகுல் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

image

லோக்சபா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த EC அவரிடமுள்ள ஆதாரங்களை உறுதிமொழி பத்திரங்களாக வழங்கும்படி தெரிவித்த நிலையில், ராகுல் அதற்கு மறுத்துவிட்டார். இந்நிலையில், உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யாத ராகுல், EC மீது கேள்வி எழுப்பும் சோனியா, பிரியங்கா ஆகியோர் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News August 9, 2025

ஹேப்பியா இருக்கணுமா? 10 நிமிடம் ஓடுங்க!

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாகிறது. இதனால் மூளையில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மூளையின் முன்புரணி தூண்டப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த மனநிலை மேம்பட்டு, மகிழ்ச்சியான உணர்வு ஏற்படுமாம். ஓடத் தயாரா?

News August 9, 2025

பீர் அடிச்சா… இதெல்லாம் சாப்பிடாதீங்க!

image

பீர் அருந்தும் போது கலோரி அதிகமான Non-Veg உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம். Bread, Dark chocolate ஆகியவையும் நல்லதல்ல. Beer, Bread இரண்டிலும் ஈஸ்ட் அதிகம். இது செரிமானத்தை பாதிக்கும். அதிகம் உப்பு சேர்த்த உணவுகளில் Sodium அதிகம் உள்ளதால், Dehydration, BP ஏற்படலாம். மொத்தத்தில் உடல்நலத்துக்கு கேடான பீரை தவிர்ப்பது நலம் என்கின்றனர் டாக்டர்கள்.

News August 9, 2025

அதிமுகவுடன் கூட்டணியில்லை.. பிரேமலதா அறிவிப்பு

image

<<17341369>>பிரேமலதா – அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி<<>> இடையேயான சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது. இந்நிலையில், அவரது ஹோட்டலில் தங்கி இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி என சொல்ல முடியாது எனவும் பிரேமலதா விளக்கியுள்ளார். 2026 ஜன. 9-ல் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!