India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல் போனது. வேறுவழியில்லை!, மீண்டும் அவரே வாரிசு அரசியலை கையிலெடுத்து, தற்போது மகனுக்கு திருச்சி தொகுதியை விடப்பிடியாக கேட்டு பெற்றிருக்கிறார்.
ஃப்ளிப்கார்ட் தளத்தில் நுகர்வோர் ஒருவர் ₹39,000 கொடுத்து ஐபோனை ஆஃபரில் புக் செய்துள்ளார். ஆனால் கூடுதல் லாபத்திற்காக அந்த ஆர்டரை வேண்டுமென்றே ஃப்ளிப்கார்ட் ரத்து செய்து, பணத்தை திருப்பி கொடுத்துள்ளது. ஆனால், ஆர்டரை ரத்து செய்ததற்காக அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். அதில், நுகர்வோர் அடைந்த மன உளைச்சலுக்காக ₹10,000 இழப்பீடு வழங்க ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக்கட்சியில் இணைவாரா போன்ற பல கேள்விகள் எழுத் தொடங்கி இருக்கிறது.
பாஜக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் இணைந்துள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் 2017 நவம்பர் 7ஆம் தேதி பதிவிட்ட எக்ஸ் பதிவு தற்போது டிரெண்டிங் செய்யப்படுகிறது. “பிரதமர் மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி – நெரிசல் ஏற்படுவதற்கு அவர் என்ன எடப்பாடி அளவுக்கு பெரிய தலைவரா?” என்று பிரதமர் மோடியை ராமதாஸ் விமர்சித்த பதிவு, வைரலாகி வருகிறது.
துர்கா தேவி ஆனவள் கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்ட கூடியவர். இந்த அன்னைக்கு பல்வேறு ஆலயங்கள் இருந்தாலும் கும்பகோணம் அருகில் இருக்கும் பட்டீஸ்வரம் துர்க்கையின் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பல சக்திகள் நிறைந்த பட்டீஸ்வரம் ஆலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாக சொல்லப்படுகிறது. இங்கு மிகப் பெரிய பைரவர் சன்னதியும் உள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் தரிசனம் செய்து அருளை பெறுங்கள்.
பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால் ரோஹித் ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது. சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் பற்றிய கேள்விகளை ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பௌச்சர் இருவரும் தவிர்த்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், ஹர்திக்கிற்கு எதிராக #RIPHARDIKPANDYA என்ற ஹேஷ்டேக்கை ரோஹித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மார்ச் 24 ஆம் தேதி இபிஎஸ் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்ச் 24 – 31 வரை தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார். மார்ச் 24 – திருச்சி, மார்ச் 25 – தூத்துக்குடி, நெல்லை, மார்ச் 27 -குமரி, தென்காசி, மார்ச் 28 – விருதுநகர், ராமநாதபுரம், மார்ச் 29 – காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 30 – புதுச்சேரி, கடலூர், மார்ச் 31 – சிதம்பரம், நாகையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவன் கோவிலுக்கு விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து இயந்திர யானையை வழங்கியுள்ளனர். இந்த கோவிலில் உயிருள்ள யானையை பயன்படுத்துவதற்குப் பதிலாக இயந்திர யானையை பயன்படுத்த உள்ளதாக கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இதை பாராட்டும் விதமாக தற்போது ‘மகாதேவன்’ என்ற இயந்திர யானையை பரிசளித்துள்ளனர்.
பொன்முடிக்கு தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை, இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது என அதிமுக வழக்கறிஞர் அணி கூறியுள்ளது. குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்தால், அதற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.