India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக 10 ஆண்டுகளில் செய்த சாதனையின் பலனாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். சேலம் கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், பாஜகவிற்கு கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் பேச்சாக இருப்பதாக அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் புதிய சின்னத்துடன் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாதக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. எனினும், அதில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் நாதக முடிவை மாற்றியுள்ளது.
ஐபிஎல்லில் வர்ணனையாளராக நவ்ஜோத் சிங் சித்து செயல்படவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர், காங்கிரஸில் சேர்ந்து முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ₹1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் லைகா குறித்து கருத்து தெரிவிக்கவும் சவுக்கு சங்கருக்கு தடை விதித்துள்ளது.
பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாளொன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், 6,900 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், காவிரி மூலம் 147 கோடி லிட்டர், ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 கோடி லிட்டர் தண்ணீரும் கிடைக்கிறது’ என்றார்
புதிய திரைப்படத்தில் நடிக்க விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிக்கும் Goat படத்தில் வரியுடன் சேர்த்து ரூ.200 கோடியை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க ‘ஆதார் மித்ரா’ என்ற புதிய ஃபீச்சர் சாட்பாட் ஒன்றை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டு விண்ணப்ப நிலை, புதுப்பிப்பு நிலை, புகார்களின் நிலை உள்ளிட்ட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் https://uidai.gov.in என்ற பக்கத்தில் Frequently asked questions, Have any Question? ஆப்ஷனை கிளிக் செய்து கேள்வி கேட்கலாம்.
நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி மூலம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளன.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையிலுள்ள அக்கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிடவுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2019 தேர்தலைப் போலவே இம்முறையும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.