News April 14, 2024

காசி விஸ்வநாதரை தரிசித்த கீர்த்தி சனோன்!

image

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பாலிவுட் பிரபலங்கள் கீர்த்தி சனோன், ரன்வீர் சிங் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கழுத்தில் மாலை, காவித்துண்டுடன் வந்த இருவரையும் காணவும், கைக்குலுக்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வெளியே அழைத்து சென்றனர். இவர்களுடன் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணர் மணீஷ் மல்ஹோத்ராவும் கோயிலுக்கு சென்றிருந்தார்.

News April 14, 2024

2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்

image

2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில் தமிழகம் 13 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கவலை தெரிவித்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் தான் கூட்டணி என அன்புமணி கூறியுள்ளார்.

News April 14, 2024

IPL: 206 ரன்கள் விளாசிய CSK

image

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 206/4 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் 69, தூபே 66* ரன்கள் அடித்தனர். கடைசியாக களமிறங்கிய தோனி 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதையடுத்து மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் பாண்டியா 2, கோட்சீ, ஷ்ரேயஸ் கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

News April 14, 2024

தேவையற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன

image

நோயாளிகளுக்கு தேவையற்ற அல்லது பொருத்தமற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக ICMR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 4838 மருத்துவ பரிந்துரை சீட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், 2171 (45%) மருந்து சீட்டுகள் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10% மருந்துகள் முற்றிலும் வேறானது என்றும் தெரியவந்துள்ளது. 13 முன்னணி அரசு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News April 14, 2024

கருணாநிதியை புகழ்ந்த கமல்ஹாசன்

image

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொன்னதை செய்தவர், செய்ததை மட்டுமே சொன்னவர் என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு தேவையான திட்டங்கள் உடனே செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

News April 14, 2024

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News April 14, 2024

மரண அடி.. அரை சதம் அடித்த தூபே

image

வான்கடே மைதானத்தில் அதிரடியாக ஆடிவரும் CSK வீரர் ஷிவம் தூபே அரை சதம் அடித்துள்ளார். மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்த அவர், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 50* ரன்கள் அடித்துள்ளார். ருதுராஜ் 69 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 15.1 ஓவர்கள் முடிவில் 150/2 ரன்கள் எடுத்துள்ளது. இன்று சிஎஸ்கே எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?

News April 14, 2024

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 10 வயது சிறுவன் முத்துராமலிங்கம் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சிறுவன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது தண்ணீர் பம்பில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 14, 2024

அரை சதம் கடந்தார் ருதுராஜ்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவரும் இவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். மேலும், 57 போட்டிகளில் விளையாடி 2,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் குறைவான போட்டிகளில் விளையாடி 2,000 ரன்களைக் கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது CSK 13 ஓவரில் 110/2 ரன்கள் எடுத்துள்ளது.

News April 14, 2024

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். இதற்காக இளைஞர்கள் பலர் ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கின் ஃபேர்னஸ் க்ரீம்களின் பயன்பாடு இந்தியாவில் சிறுநீரக பிரச்னைகளை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வில், சில ஃபேர்னஸ் க்ரீம்களில் சேர்க்கப்படும் மெர்க்குரி, சிறுநீரகத்தை செயலிழக்க வைப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!