News April 8, 2024

ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி

image

2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், தற்போது 10.93 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட்டாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News April 7, 2024

வாய்ப்புண் விரைவில் குணமாக இதை பண்ணுங்க!

image

ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்ணால் அவதிப்படுவோர் மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பொதுவாக, துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.

News April 7, 2024

ரீல்ஸ் எடுப்பதை தடுத்ததால் காவலர்கள் மீது தாக்குதல்

image

மத்திய பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில், தடை செய்யப்பட்ட பகுதியில் நின்று 2 பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பெண் காவலர்கள் காயமடைந்த நிலையில், அந்த பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2024

ஐபிஎல் : லக்னோ அணி வெற்றி

image

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். 164 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.

News April 7, 2024

நீட் ரகசியத்தை உதயநிதி எப்போது வெளியிடுவார்?

image

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி எப்போது வெளியிடுவார்? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், நீட் தேர்வு குறித்த ரகசியத்தை அமைச்சர் உதயநிதி இதுவரை வெளியிடவில்லை. திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பச்சையாக பொய்ச் சொல்கிறார்’ என்றார்.

News April 7, 2024

கடும் நெருக்கடியால் விஸ்தாரா திடீர் முடிவு

image

விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையில் சிக்கியுள்ள விஸ்தாரா விமான நிறுவனம், தினசரி 25 – 30 விமானங்களின் சேவையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தங்களின் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை என தெரிவித்து பணியாளர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர்.

News April 7, 2024

மக்களவைத் தேர்தலும்..பெண் வேட்பாளர்களும்!

image

1957ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. 1957இல் 45 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019இல் 726 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1957ஆம் ஆண்டு தேர்தலில் 1,474 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019ஆம் ஆண்டு தேர்தலில் 7,322 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

நாளை சூரிய கிரகணம். இந்த ராசிகளுக்கு ஆபத்து

image

வானியல் அதிசயங்களுள் ஒன்றான சூரிய கிரகணம் நாளைய தினம் (ஏப்., 8) நடைபெறவுள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அதன் தாக்கம் அனைத்து ராசியினர் மீதும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசியினர் இந்த கிரகணத்தை தொடர்ந்து 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். சுகாதார ரீதியான தொல்லைகளை இவர்கள் அனுபவிக்க நேரிடலாம்.

News April 7, 2024

இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியானது ‘ரெபெல்’

image

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் மார்ச் 22ஆம் தேதி வெளியான படம் ‘ரெபெல்’. கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்திற்கு திரையரங்குகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் ரெபெல் படம் வெளியாகியுள்ளது. திரையரங்கில் படம் வெளியான இரண்டே வாரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.

News April 7, 2024

நாளை தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்

image

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகிறார். நாளை (ஏப்.8) நாமக்கல், நாகை தொகுதி வேட்பாளர்களுக்கும், நாளை மறுநாள் (ஏப்.9) தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நாளை காலை டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராஜ்நாத் சிங் அங்கிருந்து நாமக்கல் சென்று வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார்.

error: Content is protected !!