India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தமிழ் கலாச்சாரம், சனாதனத்தை களங்கப்படுத்தியதோடு, அதற்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர்’ என்றார்.
இந்திய இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. குறிப்பாக 13 – 17 வயதுடைய இளம் பருவத்தினரில் 7.3% பேர் மனச்சோர்வை உணர்கின்றனர். தூக்கமின்மை, ஒருவித சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள் ஆகும். இவை நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம் என்கிறார்கள் மனநலம் சார்ந்த நிபுணர்கள்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லையென சீமான் குற்றம்சாட்டியுள்ளார். வேலூரில் நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், ‘ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. ஆனால் சமாதி ரூ.150 கோடிக்கு கட்ட காசு உள்ளது. கல்வியை இலவசமாக, தரமாக தந்தால் போதுமென கேட்கிறோம். பெண்களை 1,000 ரூபாய்க்கு கையேந்த வைப்பது தமிழ் மக்களுக்கு தன்மான இழப்பாகும்’ என்றார்.
டி20 போட்டிகளில் 1500 பவுண்டரிகள் அடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோஹித் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிராக 1000 ரன்களையும் கடந்தார் ரோஹித்.
தூத்துக்குடி மணப்பாடு அருகே பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது பிரசார வாகனம், கைப்பையில் சோதனை நடத்திய பிறகு, அவரை பிரசாரத்திற்கு செல்ல அனுமதித்துள்ளனர். திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவது இது 3ஆவது முறையாகும்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா, துஷாரா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளில் திமுகவால் கோவையில் பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என்று கூறிய அவர், தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக, கோவையில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் பார்வதிக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தங்கலான் படக்குழு, அவர் நடித்துவரும் கங்கம்மா எனும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
நீலகிரியில் 17 வயது பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பள்ளியில் சக வகுப்பு மாணவனுடன் சுற்றுலா சென்றிருந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தால் மாணவி கர்ப்பமானதாக தெரிகிறது. அக்கருவை கலைக்க மாணவியின் பெற்றோர் மருத்துவரை நாடியிருக்கின்றனர். இதனையடுத்து மாணவர், மாணவி இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகள்தான் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஆகையால், இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் டெல்லி அணி ஒரு போட்டியில் வென்று 9ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி விளையாடிய 3 போட்டியிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது
Sorry, no posts matched your criteria.