News April 6, 2024

மா.கம்யூ. கட்சி வங்கி கணக்கை முடக்கியது வருமான வரித்துறை

image

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்கையும் வருமான வரித்துறை முடக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் பொதுத்துறை வங்கியிலுள்ள அக்கட்சியின் வங்கி கணக்கில் இருந்து அண்மையில் ₹1 கோடி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கணக்கு தாக்கலில் இத்தொகை குறித்து தெரிவிக்கவில்லை எனக் கூறி, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதில் ₹4.8 கோடி இருந்ததாக தெரிகிறது.

News April 6, 2024

Manifesto: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 72 வாக்குறுதிகளை கொண்ட மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கச்சத்தீவு மீட்பு, ஜிஎஸ்டி நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் நீக்கம், கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படும். விடுதலைப் புலிகள் மீதான தடைகள் நீக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

News April 6, 2024

பரப்புரையை ரத்து செய்தார் ரவிக்குமார்

image

விழுப்புரத்தில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டபோது, உடன் இருந்த எம்எல்ஏ புகழேந்தி திடீரென்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், புகழேந்தி மறைவுக்கு விசிக எம்.பி ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தேர்தல் பரப்புரையை ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்தார்.

News April 6, 2024

உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளர்ச்சி

image

பிரதமர் மோடி தலைமையின்கீழ், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது என ஜேபி நட்டா புகழ்ந்துள்ளார். பாஜக நிறுவன நாளையொட்டி, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் பேசிய நட்டா, 400 தொகுதிகளில் வெல்ல வேண்டுமென கட்சியினர் உறுதியேற்க வேண்டும் என்றும், இந்த இலக்கை அடைய முழு பலத்துடன் உழைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

News April 6, 2024

தந்தை மரணம் – மீரா ஜாஸ்மின் உருக்கம்

image

மறைந்த தனது தந்தை ஜோசப் ஃபிலிப் (83) குறித்து தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை நடிகை மீரா ஜாஸ்மின் பதிவிட்டுள்ளார். ஃபிலிப்பின் இளமைக்கால படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை வெளியிட்ட அவர், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை… உங்கள் நினைவாக என்னிடம்” என பிரிவாற்றாமையில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

News April 6, 2024

காங்கிரஸ் மீது பினராயி விஜயன் கடும் தாக்கு

image

கூட்டணிக் கட்சியான காங்கிரஸை கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதிலும், கேரளாவில் இக்கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், வாக்குகளுக்காக கொள்கைகளை மாற்றும் கட்சி காங்கிரஸ். ஆனால் தங்கள் கட்சி கொள்கைகளில் உறுதியாக உள்ள கட்சி என்றார்.

News April 6, 2024

விக்கிரவாண்டி புகழேந்தி கடந்து வந்த பாதை

image

விழுப்புரம் மாவட்டம் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (71). 1973ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவர் கோலியனூர் ஒன்றியத் தலைவர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட
பல பொறுப்புகளை வகித்துள்ளார். திமுக மூத்த அமைச்சரான பொன்முடியின் ஆதரவாளரான இவர் 2019 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியபோதும் 2021 இல் எம்.எல்.ஏவாக (விக்கிரவாண்டி) தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

BREAKING: மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர்

image

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். நண்பரின் மறைவு செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சற்றுநேரத்தில் விரைகிறார். அவருடன் மூத்த அமைச்சர்களும், முக்கிய தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News April 6, 2024

தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் முதியவர்

image

ஜார்க்கண்டைச் சேர்ந்த 92 வயது முதியவர், மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளார். பத்தோரியை சேர்ந்த முதியவர் அன்சாரி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், இதுவரை வாக்களிக்காமல் இருந்தார். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு நடத்தியபோது இது தெரிய வந்ததையடுத்து அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனவே இம்முறை வாக்குப்பதிவு செய்ய இருப்பதாக அன்சாரி தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ₹7,720 உயர்வு

image

1 கிராம் தங்கம் விலை கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி ₹5,650ஆகவும், 1 சவரன் தங்கம் ₹45,200ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த ஓராண்டில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் கிராமுக்கு ₹965 அதிகரித்து, இன்று ₹6615ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை ₹7,720 உயர்ந்து ₹52,920ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் கிராமுக்கு ₹705ம், சவரனுக்கு ₹5,640ம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!