News April 6, 2024

விக்கிரவாண்டி புகழேந்தி கடந்து வந்த பாதை

image

விழுப்புரம் மாவட்டம் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (71). 1973ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவர் கோலியனூர் ஒன்றியத் தலைவர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட
பல பொறுப்புகளை வகித்துள்ளார். திமுக மூத்த அமைச்சரான பொன்முடியின் ஆதரவாளரான இவர் 2019 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியபோதும் 2021 இல் எம்.எல்.ஏவாக (விக்கிரவாண்டி) தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

BREAKING: மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர்

image

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். நண்பரின் மறைவு செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சற்றுநேரத்தில் விரைகிறார். அவருடன் மூத்த அமைச்சர்களும், முக்கிய தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News April 6, 2024

தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் முதியவர்

image

ஜார்க்கண்டைச் சேர்ந்த 92 வயது முதியவர், மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளார். பத்தோரியை சேர்ந்த முதியவர் அன்சாரி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், இதுவரை வாக்களிக்காமல் இருந்தார். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு நடத்தியபோது இது தெரிய வந்ததையடுத்து அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனவே இம்முறை வாக்குப்பதிவு செய்ய இருப்பதாக அன்சாரி தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ₹7,720 உயர்வு

image

1 கிராம் தங்கம் விலை கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி ₹5,650ஆகவும், 1 சவரன் தங்கம் ₹45,200ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த ஓராண்டில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் கிராமுக்கு ₹965 அதிகரித்து, இன்று ₹6615ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை ₹7,720 உயர்ந்து ₹52,920ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் கிராமுக்கு ₹705ம், சவரனுக்கு ₹5,640ம் உயர்ந்துள்ளது.

News April 6, 2024

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

image

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சற்றுமுன் காலமானார். நேற்று முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இச்செய்தியை கேட்ட உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்.

News April 6, 2024

அன்று மாலத்தீவு… இன்று வங்கதேசம்!

image

மாலத்தீவைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் ‘India Out’ என்ற பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான பி.என்.பி, ஜாதிய கட்சி போன்றவை இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. ஷேக் ஹசீனாவை 5ஆவது முறையாக பிரதமராக்க இந்தியா தலையீடு செய்தது என்றும் எதிர்க்கட்சியினரைச் சிறையிலடைத்த அவாமி லீக் அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றும் கொந்தளிக்கின்றன.

News April 6, 2024

எங்களை வீழ்த்திய ஒரே கேப்டன்

image

ரோஹித் ஷர்மா கேப்டன்ஸி குறித்து CSK அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறிய கருத்து வைரலாகி வருகிறது. CSK அணி எந்த கேப்டனுக்கு பயப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “உண்மையைச் சொல்வதானால், இந்தாண்டு அப்படியான கேப்டன் யாரும் இங்கில்லை. இறுதிப் போட்டியில் எங்களை வீழ்த்திய ஒரேயொரு கேப்டனும் இப்போது அந்த பதவியில் இல்லை. நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.

News April 6, 2024

டெல்லியில் இணக்கம், கேரளாவில் கலக்கம்

image

I.N.D.I.A கூட்டணியில் உள்ள சிபிஐ கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக ஆனி ராஜாவை களமிறக்கியுள்ளது. இந்நிலையில், காங்., நிலை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளார். ஒரு பக்கம், ராகுலை உ.பி-க்குச் சென்று போட்டியிடுமாறு இடதுசாரிகள் வலியுறுத்துவதாகவும், மறுபுறம் அதே இடதுசாரிகள் I.N.D.I.A கூட்டணிக் கூட்டத்தின் போது ராகுலை கட்டியணைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News April 6, 2024

ரூ.53,000-ஐ நெருங்கியது தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ரூ.53,000-ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 6, 2024

தூரத்தில் இருந்து வந்த சத்தம்.. மைக்கை ஆப் செய்த டிடிவி

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே இருப்பதால் மாநில முழுவதும் தேர்தல் பரப்புரை விறுவிறுப்பு அடைந்துள்ளது. தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதாரித்து டிடிவி பரப்புரை மேற்கொண்டார். திமுக மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளி வாசலில் தொழுகைக்கான சத்தம் கேட்டது. இதை கவனித்த உடன் டிடிவி கையில் இருந்த மைக்கை ஆப் செய்துவிட்டு பேசுவதை நிறுத்தினார்.

error: Content is protected !!