News April 6, 2024

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘ராயன்’ டீசர்

image

தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 6, 2024

மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

image

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்.19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது.

News April 6, 2024

விடுமுறையில் மாற்றம்.. குழப்பம்

image

பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அடுத்தடுத்த அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். முன்னதாக, ஏப்.12 வரை பள்ளிக்கு வர வேண்டும். 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், ஏப்.15 -19 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 6, 2024

கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும்

image

I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News April 6, 2024

₹2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

image

ஜிஎஸ்டி அதிகாரிகள் ₹2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 2023-2024 நிதியாண்டில் ₹20.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.6% அதிகம். இந்நிலையில் 2023-2024 நிதியாண்டில் ₹2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடந்ததையும், அதில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ₹83,588 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

News April 6, 2024

பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக

image

பழனியில் ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, தமிழகம் முழுவதுமே ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மோசமான நிலையில் தான் உள்ளன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

News April 6, 2024

இதை செய்தால் சனி தோஷம் நிச்சயம் விலகும்

image

ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். இந்த தோஷத்தை கீழ்காணும் வழிகளில், நீக்க முடியும் என்பது ஐதீகம் *தினமும் காலையில் எழுந்து நீராடி, சனிபகவானின் வாகனமான காக்கைகளுக்கு உணவிடுதல் * சனிக்கிழமை தோறும் சனிபகவான் சன்னிதியில் எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபடுதல் * அனுமன், விநாயகர், கால பைரவரை வழிபடுதல் மூலம் சனி தோஷம் விலகும் என நம்பப்படுகிறது

News April 6, 2024

இரவில் தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

image

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் 2 பேர், தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த 4 பேர், காதலர்களை கட்டிப்போட்டு, 2 பெண்களையும் இரவு முழுக்க பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 6, 2024

இப்போதே வருமான வரி தாக்கல் செய்யலாம்

image

2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்.1 முதலே தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தான் IT போர்ட்டலில் தாக்கல் செய்ய முடிந்தது. இந்நிலையில், பெரும்பாலான வரி செலுத்துவோரால் பயன்படுத்தப்படும் ITR-1, 2, 4 ஆகிய படிவங்கள் தற்போது உள்ளீடு செய்யப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் தற்போதே IT தாக்கல் செய்யலாம்.

News April 6, 2024

ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

image

காசாவில் தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் 4 தீர்மானங்களை கொண்டு வந்தது. அதில் காசாவில் மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்களை ஆதரித்த இந்தியா, தாக்குதலை நிறுத்தக்கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது.

error: Content is protected !!