India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வதந்திகள் மூலம் இதுவரை 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு 5ஆவது திருமணம். நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனால், இப்போது இல்லை. EMI-கள் நிறைய இருப்பதால், திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறினார்.
காயத்தில் இருந்த குணமடைந்த சூர்யகுமார் யாதவ், இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லிக்கு எதிரான நாளைய போட்டிக்காக சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 127
▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
▶விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையெனில், அவர் சொல்லும் சொல் மற்றவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர்-41.5, சேலம்-41.2, தருமபுரி-41, ஈரோடு-41.2, மதுரை, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி- 40, திருத்தணி-39.3, தஞ்சை-39, கோவை-39.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்தத் திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?. இடத்தைச் சொல்லுங்கள். நானே வருகிறேன். ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் கூட பணம் வாங்கிய கட்சி திமுக” என கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர், பவர் பிளே ஓவர்களில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி அசத்தினார். 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்த இவர், தீபக் சாகர் வீசிய பந்தில் அவுட்டானார். மும்பைக்கு எதிரான போட்டியில் 63(23) ரன்கள் குவித்து, முதல் ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.
இன்று (ஏப்ரல் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் மோடி, நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார் என நடிகர் வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார். சிவகாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
காதலர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பெண்கள், தங்கள் காதலர்களுடன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 6 இளைஞர்கள் காதல் ஜோடிகளை மிரட்டி பைக்கில் அழைத்துச் சென்று, காதலர்கள் கண் முன்னே பெண்களை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் மூவரை கைது செய்துள்ளார்.
அரசு பணிகளில் இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டிய நிலைக்கு பாஜக அரசு தள்ளி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக அரசு அப்படி இல்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவார். நம் நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.