News April 3, 2024

₹2000 கோடி நிவாரணம் கேட்டு தமிழக அரசு வழக்கு

image

₹2000 கோடி வெள்ள நிவாரணம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் எந்தப் பயனும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இவ்வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News April 3, 2024

சில நாட்கள் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்

image

அடுத்த சில நாட்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரின் நண்பர் சாதிக்கை போலீசார் கைது செய்ய நிலையில், டெல்லியில் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய அமீர், 2 – 3 நாள்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசுவதாக கூறியுள்ளார்.

News April 3, 2024

நேருவுக்கு ‘இந்தியா 2ஆவது, சீனாவே முதல்’

image

கடந்த கால தவறுகளே, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ள நிலையில், ஐ.நா. கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைத்தபோது, ‘நாங்கள் இதற்கு தகுதியானவர்கள், ஆனால் முதலில் சீனாவே பெற வேண்டும்’ என்ற நேருவின் கூற்றை நினைவுகூர்ந்து அவர் விமர்சித்தார்.

News April 3, 2024

தமிழ்நாட்டில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக

image

முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக தமிழகத்தில் தங்களின் இருப்பை நிரூபித்தே ஆக வேண்டும் என தீவிரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போன்று அரசியல் தட்பவெப்பம் இல்லாத நிலையில், படிப்படியாக வெற்றிக்கோட்டை அடைய பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. முதலில் அதிமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை பிரதானப்படுத்த, பல இடங்களில் 2ஆவது இடத்தை பெற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது.

News April 3, 2024

நியூசி. அணிக்கு தலைமை தாங்கும் மைக்கேல் பிரேஸ்வெல்

image

நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டி20 வரும் 18ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. நியூசி. முன்னணி வீரர்களான வில்லியம்சன், சாண்ட்னெர், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இதனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இந்த அணி களம் காண்கிறது.

News April 3, 2024

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு.. எச்சரிக்கை

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதனால், பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

News April 3, 2024

முருகன் உள்ளிட்ட 3 பேர் இன்று இலங்கை பயணம்

image

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர். திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை செல்லும் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

News April 3, 2024

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

image

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

News April 3, 2024

பேத்தியே மன அழுத்தத்தை போக்கும் மருந்து

image

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானிக்கு காவேரி என்ற 14 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதன் முதலாக தனது பேத்தியின் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதானி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், தனது பேத்தி கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் மங்கலாகவே தெரிவதாகவும், தனது மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக பேத்தி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

News April 3, 2024

முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

image

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்பு தான் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு சம்பளம் ரூ.25 உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு பின்பும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!