India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோடியை சீனாவின் தூதராக நியமிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேசம் முதல் லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த பகுதிகளுக்கு சீனா வரவில்லை, நாங்களும் போக மாட்டோம் என மோடி கூறுவது விந்தையாக உள்ளதாக அவர் X-இல் கிண்டலடித்துள்ளார். முன்னதாக அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியது.
ஜாஃபர் சாதிக் கைதானது தொடர்பாக அமீரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர். அமீரிடம் விசாரணை நடந்தபோது அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே அமீரை தற்போதைக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரம் அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ₹52,000ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹52,000க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹6,500க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹84க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹84,000க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் ₹3,824 கோடியாக இருந்தது. கோடை வெயில் சுட்டெரிப்பதால், மது வகைகளை விட பீர் விற்பனை அதிகரித்துள்ளது. மார்ச்சில் 32.72 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையாகியுள்ளன. இது பிப்ரவரியில் 26.93 லட்சம் பெட்டிகளாகவும், ஜனவரியில் 24.20 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது.
வாரத்தின் 3ஆவது நாளான இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி (9 : 33am) பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிந்து 73,625 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 90 புள்ளி சரிந்து 22,362 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்.11 அல்லது 12இல் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக கோவை, கரூர், நெல்லை, விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதேபோல், பிரதமர் மோடி தமிழகத்தில் ஏப்.9, 10, 13, 14ஆம் தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
திமுக அரசின் ₹1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் மக்களவை – சட்டமன்ற தேர்தலையொட்டி, சந்திரபாபு நாயுடு, ஜெகனுக்கு எதிராக காங்., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஷர்மிளா, மகளிர் உரிமைத் திட்டத்தை மிஞ்சும் வகையில், ஒவ்வொரு ஏழை குடும்ப பெண்ணுக்கும் மாதம்தோறும் ₹8500, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதை அடுத்து, அவருக்குப் பதில் அரவிந்த் சாமி அந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தாமதமாவதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக, துல்கர் சல்மானும் அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினர். இந்நிலையில், துல்கருக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கையில் சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி வெற்றிபெறுவேன் என பாஜக வேட்பாளர் தேவநாதன் தெரிவித்துள்ளார்.1984 முதல் 30 ஆண்டாக சிதம்பரம் குடும்பத்தினர் இங்கு எம்பியாக இருந்தாலும், இந்த தொகுதி மிகவும் பின்தங்கியே உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இத்தேர்தலில் அவர்களை வீழ்த்தி நாடாளுமன்றம் செல்வேன் என்று சூளுரைத்தார். ப.சிதம்பரம் இந்த தொகுதியில் இருந்து 7 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள RCB, MI அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்துள்ளன. MI அணியில் பும்ராவின் பந்துவீச்சை தவிர, கேப்டன்ஷிப் முதல் அனைத்தும் சொதப்பல் தான். RCB அணியில் மிடில் ஆர்டர் வீரர்களின் பேட்டிங் மோசம். இது நேற்றைய போட்டியிலும் (மேக்ஸ்வெல் -0, கிரீன் – 9, அனுஜ் ராவத் -11) எதிரொலித்தது. இதனால், தான் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
Sorry, no posts matched your criteria.