India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் தனக்கும் உள்ள காதல் சாதரண காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் தான் சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன் என்றார்.
ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கை ரேகைப் பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகைப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31உடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று தகவல் வெளியானது. கூட்டுறவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய LSG வீரர்கள் பின்னர் வரிசையாக ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டி காக் 81, பூரண் 40* ரன்கள் எடுத்தனர். RCB தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 182 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் RCB அணி களமிறங்க உள்ளது.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது புலிப்பாண்டி இபிஎஸ், எலிப்பாண்டியாக இருந்தாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஏ உள்பட பல்வேறு சட்டங்களை பாஜகவுடன் இணைந்து ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதை எதிர்த்து பேசுவதாகக் கூறிய அவர், தேர்தல் காரணமாக சிறுபான்மையினர் மீது திடீரென பாசத்தை காட்டி வருவதாக காட்டமாக விமர்சித்தார்.
தனியாக விடப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வீரர்கள் கேப்டனாக ஏற்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதேபோல, வீரர்கள் சேர்ந்து விளையாடினால் தான் வெல்ல முடியும் என நவ்ஜோத் சிங் சித்துவும், ரோகித் மற்றும் பும்ரா ஆகியோர் பாண்டியாவை குழப்ப முயற்சிப்பதாக அம்பத்தி ராயுடுவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக MI கேப்டன் பாண்டியாவுக்கு சக வீரர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் அதிமுக நகர செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், ‘தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும்’ என்றார்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சில ரகசியங்களை தெரிந்து கொள்வது அவசியம். குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள். பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள் என்றால், அரவணைப்புக்கு ஏங்குகிறார்கள் என்று பொருள். இதனை கவனித்தாலே பிரச்னையை சரிசெய்யலாம்.
மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை உள்பட 8 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. அதனை சீரமைக்க தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் எல்எஸ்ஜி வீரர் டி காக் அரை சதம் கடந்துள்ளார். 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 58* ரன்கள் அடித்துள்ளார். கே.எல்.ராகுல் 20 ரன்னிலும், படிக்கல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டொய்னஸ் 9* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை LSG 12 ஓவர்கள் முடிவில் 102/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
2024ஆம் நிதியாண்டில் 6,644 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 1,100 கிலோ மீட்டர் கூடுதலாகும். நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் அவசியமாக இருக்கும் நிலையில், அதிக நீளத்திற்கு சாலைகள் அமைப்பதில் புதிய உச்சம் தொடப்பட்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.