India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னட நடிகர் சிவராஜ் குமார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்த அவர், தற்போது கன்னடப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்து பிரசாரமும் செய்து வருகிறார். இதனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்ததாக பள்ளிக் கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக 2.77 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி 3 லட்சத்து 167 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கத்துக்குட்டி இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்பவில்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படத்தின் இயக்குநர் குறைந்தது ஒரு படமாவது இயக்கி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்த அவர், இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கவனித்த பிறகே இயக்குநரை தேர்வு செய்வேன் எனக் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த கருத்து புதுமுக இயக்குநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் திமுக ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், EVM-VVPAT இடையே தற்போது கன்ட்ரோல் யூனிட்டை வைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், இது முறைகேடுக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் புவனேஷ்வரில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான ‘நால்கோ’வில் காலியாக உள்ள 277 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்.2) கடைசி நாளாகும். பொறியியல் பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 30 வயதிற்குட்பட்டவர்கள், <
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘புஷ்பா 2’ டீசர் என்ற ஹேஷ்டேக் X-ல் டிரெண்டாகி வருகிறது.
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் இன்று நடந்த விசாரணையில் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 561 வழக்குகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளும் உள்ளன.
சமீபகாலமாக அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26இல் நடிகர் சேஷு, மார்ச் 29 இல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று அதிகாலை நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தொடர் மரணத்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் உள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதித்த 25 லட்சம் குடும்பங்களுக்கு ₹1487 கோடி நிவாரணம் வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த ஆணையிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு நிதி தராத போதும் கடந்த ஜனவரி வரை 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹6000 மற்றும் விடுபட்ட 53,000 குடும்பங்களுக்கு தலா ₹6000 வழங்கப்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஏப்.17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோடைக்காலம் என்றால் அதிகம் விற்பனையாவது ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்தான். ஆனால் அவை உடல் சூட்டை மேலும் அதிகரிக்க செய்யும். இதற்கு பதிலாக இயற்கை கொடையாக தந்த நீர் சத்து நிறைந்த தர்பூசணி, ஆரஞ்ச், இளநீர், வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். முடிந்தவரையில் அசைவம் வேண்டாம். வெளியே செல்லும்போது சூட்டை ஈர்க்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெண்மை நிற பருத்தி ஆடைகளை அணியலாம்.
Sorry, no posts matched your criteria.