India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே மஹுவா மீது ஃபெமா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2022 முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் சென்னை சிறுசேரியில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் தன்மயி மோதிவாலா என்பவர் X தளத்தில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோர் 1994ஆம் ஆண்டு ₹500 மதிப்பிலான SBI வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கின்றனர். அதன்பின், அவர்களே அதனை மறந்து போயிருக்கின்றனர். எதேச்சையாக அந்த பங்குகள் மருத்துவர் மோதிவாலாவிடம் கிடைக்க, அதன் மதிப்பு தற்போது ₹5 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டின் சக்தியை பாருங்க.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்திவந்த நிலையில் சமீப காலமாகவே அது பிரச்சனையில் உள்ளது. தற்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறிவரும் பாஜக 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என வினவியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டேன் என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனது பந்து வீச்சு திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் IPL மற்றும் டி20 உலக கோப்பைத் தொடர்களைத் தியாகம் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததை தொடர்ந்து, பாராசிட்டமால், ஃபெர்னோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பாஜகவிற்கு இலங்கை தமிழர்களை பற்றி கவலையில்லை போல என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று பாஜக அரசு 2015இல் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால் பாஜகவினர் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக எழுந்த புகாரில், மேல் நடவடிக்கை கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புகார் குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், மத்திய அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஏப்.25-க்கு ஒத்திவைத்தது.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகராக வலம் வந்த ஆடம்ஸ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் அவர் இயக்கியுள்ள படத்திற்கு ‘கேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரிலீசாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியினர் தேசத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை, தங்கள் சுயநலத்திற்காகவே போட்டியிடுகின்றனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், ‘நாட்டில் அரசியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம், தேச நலன் பேசும் பாஜக இருக்கிறது. மறுபுறம் நாட்டை கொள்ளையடிக்கும் வழியை கண்டுபிடிக்கும் காங்கிரஸ் இருக்கிறது’ என சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.