India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க, ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடியது. ஆனால் உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களை திறக்க முடியும் என அந்நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற இருந்த கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டி ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் ஏப்.17ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனால், ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி ஒருநாள் முன்கூட்டியே நடத்தப்படுகிறது. இதேபோல, ஏப்.16ஆம் தேதி நடைபெற இருந்த குஜராத்-டெல்லி இடையிலான லீக் போட்டி ஏப்.17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தனக்கு பிடித்தமான நடிகர் துல்கர் சல்மான்தான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்தபோது தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர், துல்கர் சல்மான் அந்த சமயத்தில் ஊக்கமளித்ததாக கூறினார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம். எனது வழிகாட்டி, நண்பர் எல்லாம் அவர்தான் என நெகிழ்ச்சி தெரிவித்தார். துல்கரை அவர் பல இடங்களில் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஆந்திரா, பீகார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் அண்ணனும், தங்கையும் எதிரெதிர் துருவங்களாக தேர்தலில் களம் காண்பதால், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்னையாக இருப்பது உடல் பருமன். என்னதான் டயட் பாலோ செய்தாலும், உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்காகவே இன்னொரு வழி இருக்கிறது. அதுதான் பேரியாட்ரிக் சர்ஜரி. பேரியாட்ரிக் என்று சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை தெரபி இது. BMI 40-க்கு மேல் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் இந்த சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில், 25% இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் LKG முதல் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி நடப்பாண்டில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்.22ம் தேதி முதல் (rte.tnschools.gov.in) பெற்றோர் விண்ணப்பிக்கலாம். மே.20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
குப்பை தொட்டியாக கடலூர் மாவட்டத்தை மாற்றியுள்ளார்கள் என தங்கர் பச்சான் விமர்சித்துள்ளார். இந்த தொகுதியில் என்ன பிரச்னை, எதை சரி செய்ய வேண்டும் என என்னை விட மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், இந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் தன்னை எம்.பியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், இட ஒதுக்கீடு குறித்து பேச பாமகவை தவிர யாருக்கும் தகுதியில்லை எனக் கூறினார்.
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்சமாக 39 – 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு வரும் அவர், ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் அவர் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கச்சத்தீவு பிரச்னையில் திமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துவதாக அதிமுக எம்பி சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘கச்சத்தீவு குறித்து பேச பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. மீனவர்களை விரட்டும்போது கச்சத்தீவு பிரச்னை தெரியவில்லையா? 10 ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நேரத்தில் பேசுவதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.