News March 17, 2024

குபேரன் ஆகப் போகும் ராசிகள்

image

நவ கிரகங்களில் இளையவராக கருதப்படும் புதன் பகவான், அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். இவர் ஏப்ரல் 2ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதன் காரணமாக சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினர் குபேர யோகத்தை பெற இருக்கின்றனர். தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் ஞானத்தை பயன்படுத்தி முன்னேறும் வாய்ப்பினை இந்த ராசியினருக்கு புதன் பகவான் ஏற்படுத்தி தரப் போகிறார்.

News March 17, 2024

பெங்களூரு அணி அபார வெற்றி

image

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. கடைசி ஓவரில் இலக்கை அடைந்து, மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவில் நடைபெற்ற பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது.

News March 17, 2024

Flipkart மதிப்பு ₹41,000 கோடி குறைந்தது

image

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ₹41,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 40 பில்லியன் டாலராக இருந்த Flipkart-ன் சந்தை மதிப்பு தற்போது 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய Flipkart நிறுவனம் தவறியதே இந்த இழப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

News March 17, 2024

என்னை திட்டுகிறார்கள். நடிகர் ராதா ரவி வேதனை

image

தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாகி விடுவோம் என நடிகர் ராதா ரவி கூறியுள்ளார். டப்பிங் யூனியன் தேர்தல் குறித்து பேசிய அவர், “இந்தத் தேர்தலே வந்திருக்க கூடாது. இவர் வரமாட்டார், படுத்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். எதிரணி ராஜேந்திரன் என்னை திட்டி வருகிறார். யார் யாரோ என்னை திட்டுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் திட்டட்டும். இதுபோன்ற பல பிரச்சனைகளை நான் பார்த்து இருக்கிறேன்”எனக் கூறியுள்ளார்.

News March 17, 2024

எடப்பாடிக்கு முதுகெலும்பு இல்லையா?

image

லாட்டரி மார்டினிடம் இருந்து பாவப் பணத்தை திமுக நன்கொடையாக வாங்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “வெளிப்படைத் தன்மையுடன் எங்களது நன்கொடை விவரங்களை வெளியிட்டிருக்கிறோம். மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்ற பாஜக பற்றி அறிக்கை விட எடப்பாடி பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?” என்று வினவியிருக்கிறார்.

News March 17, 2024

மக்களே. இதை சாப்பிடாதீங்க..

image

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத் தன்மை கொண்ட ரோடமின் -பி என்ற வேதிப் பொருள் இருப்பதுதான். அதே வேதிப் பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப் படுவது தற்போது தெரியவந்துள்ளது. எனவே கடைகள் அல்லது ஹோட்டல்களில் அடர் நிறத்துடன் உணவுப் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்த்துவிடுங்கள்.

News March 17, 2024

8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

image

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்து கொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.

News March 17, 2024

சோமாலியா கடற்கொள்ளையர்கள் கைது

image

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சோமாலியா கடற்கொள்ளையர்களால் வணிக கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், கொள்ளையர்கள் சென்ற ரூயென் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 17 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன், 35 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

News March 17, 2024

RCBvsDC: அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

image

டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான WPL இறுதிப்போட்டி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், அருண் ஜெட்லீ மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. போட்டியை காண சுமார் 23,190 பார்வையாளர்கள் இன்று மைதானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இணையான ரசிகர் கூட்டத்தை, WPL தொடரும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

News March 17, 2024

பிரதமர் வேட்பாளர் யார்?

image

நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 – ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. NDA கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதியான நிலையில், INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. காங்., தலைவர் கார்கேவை சிலர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

error: Content is protected !!