India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சி தான் தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி என சீமான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கிறார்கள். 10 பேர் ஒருவரை எதிர்த்தால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அவன் வளர்ந்து விட்டான் என்று அர்த்தம். தமிழகத்தில் நாதக வளர்ந்துவிட்டது” எனக் கூறினார்.
தமிழகத்தில் வெப்ப அலையை (heat wave) எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். வெப்ப அலையின்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, தண்ணீர் வறட்சி ஏற்படும் என்பதால், இப்போதே சேமிக்க பழகுங்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல பாஜகவை பற்றி மக்கள் எண்ணுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக சாடினார். மேலும், பேரிடரின் போது உதவி கேட்டால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நம்பிக்கை தொடர்பான மதீஷ பத்திரனாவின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. தோனியின் செல்லப் பிள்ளையான அவர், கடந்த 2 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக அவர் பிடித்த கேட்ச் அபாரமாக இருந்தது. தோனி உள்ளிட்ட பலரும் அதை பாராட்டினர். இதனிடையே, சிஎஸ்கே நிர்வாகம் வீரர்களை நம்புவது போல், நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ளுங்கள் என X-இல் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி களத்தில் இறங்கி பொதுமக்களிடம் நேரடியாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் கலியபெருமாளுக்கு ஆதரவாக திருப்பத்தூரில் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு, ஒரே நாளில் ரூ.8,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மீடியா அன்ட் டெக்னாலஜி குழுமம், 2023ஆம் ஆண்டில் 58 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாகவும், வருவாய் குறைந்திருப்பதாகவும் அமெரிக்க பங்குச்சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று 21 சதவீதம் சரிந்தது. இதனால் டிரம்புக்கு ரூ.8,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
₹ 2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் தயாரித்த படத்தை இயக்கிய அமீருக்கு, இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதை ஏற்று, அமீர் இன்று நேரில் ஆஜரானார்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாக். ஆக்கிரமித்து வைத்திருக்க நேருவே காரணமென அமித் ஷா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து கொண்டிருந்தபோது தன்னிச்சையாக நேரு சண்டை நிறுத்தம் செய்தார். 2 நாள்களுக்கு பிறகு இதை செய்திருந்தால், காஷ்மீர் முழுவதும் இந்தியாவிடம் இருந்திருக்கும். அவர் செய்த தவறால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது” என்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர் சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் காலமானார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், மார்ச் 31-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த தன்சேயா, கோஹிமா போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த 3 முன்னாள் முதல்வர்களை களம் இறங்கியுள்ளனர். 28 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜக-காங் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் காங்கிரஸை வீழ்த்த முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உள்ளிட்டோர் தேர்தலில் களம் காண்கிறார்கள். லிங்காயத்து வாக்குகளை ஷெட்டரும், ஒக்கலிகா வாக்குகளை குமாரசாமியும் ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.