News March 18, 2024

இன்றே கடைசி: 2,157 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இணையதளம்: http://ssc.gov.in

News March 18, 2024

சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

image

இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ், 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.9.12 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

News March 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார் ➤ ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் ➤ அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. ➤ தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்வானார். ➤ WPL தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பெங்களூரு அணி

News March 18, 2024

சூது கவ்வும் 2 படத்தின் புதிய அப்டேட்!

image

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013இல் வெளியான படம் ‘சூது கவ்வும்’. இப்படம் வசூலை குவித்ததுடன், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆவது பாகத்தை எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

News March 18, 2024

அதிமுக – பாமக கூட்டணி இன்று அறிவிப்பு?

image

அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்கு பின், வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இதனிடையே நேற்று பாமக எம்.எல்.ஏ அருள், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 18, 2024

சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் மரின்

image

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயினின் கரோலின் மரின் சாம்பியன் பட்டம் வென்றார். பர்மிங்காமில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்ட மரின், 26-24, 11-1 என்ற செட்களில் முன்னிலையில் இருந்த போது, காயத்தால் யமகுச்சி விலகினார். இதனால் மரின் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இது ஆல் இங்கிலாந்து ஓபனில் கரோலின் வெல்லும் 2ஆவது சாம்பியன் பட்டமாகும்.

News March 18, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ மார்ச் 18 | பங்குனி – 5
▶கிழமை: திங்கள் | திதி: நவமி
▶நல்ல நேரம்: காலை 09.30-10.30 வரை, மாலை 04.30-05.30 வரை
▶கெளரி நேரம்: காலை 1.30-2.30 மாலை 07.30-08.30 வரை
▶ராகு காலம்: 07.30 & 09.00
▶எமகண்டம்: 10.30 & 12.00
▶குளிகை: 01.30-03.00
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர்

News March 18, 2024

தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

image

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20) மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார்.

News March 18, 2024

ஏப்.13க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டம்

image

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி அதிகாரிகள் இறுதி செய்யவுள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெல்லும்

image

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறுமென காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காகவே இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், நான் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளிப்பேன்’ என்றார்.

error: Content is protected !!