News April 1, 2024

முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்?

image

மும்பை – ராஜஸ்தான் இடையேயான 14ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் (கடைசி இடத்தில்) உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி அடையுமா? முதல் 2 புள்ளிகளை பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே அடையாத ராஜஸ்தான் உடன் மோதும், இப்போட்டி கடுமையாக இருக்கும்.

News April 1, 2024

பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்

image

சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில். பாலியல் வன்புணர்வாளர்கள் கமலாலயத்தில். மதவெறியர்கள் கமலாலயத்தில். குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில். ஊழல்வாதிகள் கமலாலயத்தில். மொத்தத்தில் பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

News April 1, 2024

தினமும் காலையில் உலர் திராட்சையை சாப்பிடுங்கள்

image

▶இதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
▶வைட்டமின் B மற்றும் C சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு, நோய் தொற்றை எதிர்த்துப் போராட உதவும்.
▶பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், நெஞ்செரிச்சல் பிரச்னையில் இருந்து நிவாரணம் தரும்.
▶அமிலத்தன்மை, வயிற்று உப்புசம் பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

News April 1, 2024

IPL: தோனியின் சாதனைகள்

image

பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், எம்.எஸ்.தோனி புதிய சாதனைகளை படைத்துள்ளார். 16 பந்துகளில் 37* ரன்கள் குவித்த அவர், சர்வதேச டி20 போட்டிகளில் 7,000 ரன்களை கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 20க்கும் அதிகமான ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானர். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News April 1, 2024

ஏப்ரல் 1: வரலாற்றில் இன்று

image

1867 – சிங்கப்பூர் பிரிட்டனின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1924 – இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஹிட்லருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
1935 – இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.
1937 – ஏடன் பிரிட்டனின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1946 – ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் 157 பேர் உயிரிழந்தனர்.
1957 – இந்தியாவில் 1 பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

News April 1, 2024

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

image

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தமாகா தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்து நிதி நெருக்கடியை சரி செய்வோம். போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய சட்ட நடவடிக்கை கொண்டு வரப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்பட 23 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

News April 1, 2024

‘G.O.A.T’ படத்தின் டீசர் எப்போது?

image

வெங்கட் பிரபு இயக்கி வரும் G.O.A.T. படத்தின் டீசரை, நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் படக்குழு ரஷ்யா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 1, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 122
▶குறள்: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
▶பொருள்: அடக்கத்தை சிறந்த செல்வமாக எண்ணி காக்க வேண்டும். அதைவிட சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

News April 1, 2024

தமிழக மக்களை அதிமுக, பாஜக கொச்சைப்படுத்துகிறது

image

அனைவரும் பயன் அடையும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், “மக்களுக்கான அரசாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக, பாஜக கட்சிகள் அரசை குறை கூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

News April 1, 2024

பாஜகவை விரட்டும் வரை தூங்க மாட்டோம்

image

வாக்கு இயந்திரத்தில் நீங்கள் வைக்கும் ஓட்டு தான், மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “கடந்த முறை ஒரே அணியாக இருந்த எதிரிகள், இம்முறை பிரிந்து வருகின்றனர். முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டதாக பிரதமர் மோடி சொல்கிறார். உண்மைதான். பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!