India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட 3 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய அதேநாளில் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலப் பொதுச்செயலாளர் மானாஷ் போரா, செயலாளர் கவுரவ் சோமானி, மாவட்ட தலைவர் அனுஜ் பார்காதாகி ஆகியோர் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதில், மானாஷ், அனுஜ் ஆகிய இருவரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களின் மகன்கள் ஆவர்.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். அரியலூரில் திருமாவளவனுக்காக பரப்புரை மேற்கொண்ட அவர், “தமிழகத்தின் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு ஒரு பைசாக் கூட கொடுக்கவில்லை. கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். ஆனால் 15 பைசா கூட கொடுக்கவில்லை. தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்க உள்ளது. ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர் இடம்பெறும். அதற்கு மேல் இருந்தால் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். 30 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நிறைய எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சேப்பாக்கத்தில் நடந்த 2 போட்டிகளிலும் களமிறங்காத தோனி, இன்றைய போட்டியிலாவது களமிறங்குவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, சென்னை அணி புள்ளிப் பட்டியலில் (4 புள்ளிகளுடன்) முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி வெற்றியைத் தொடருமா?
அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. 2 மக்களவை, 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், நேற்று இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர்கள் 10 பேரும் போட்டியின்றி எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
▶தமிழக மக்களவைத் தேர்தலில் 950 பேர் போட்டியிடுகின்றனர்
▶இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு பிஞ்சு போன செருப்பு: அண்ணாமலை
▶மக்களவைத் தேர்தல்: வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது
▶மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
▶விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு
▶சொத்து மதிப்பு உயர்ந்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்: அண்ணாமலை
கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால், தமிழகம் போதையில் தள்ளாடுகிறது என பிரேமலதா தெரிவித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பேருந்து கட்டணம், மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்துவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர், எப்படி மக்களுக்கு தகுதியான முதல்வராக இருப்பார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரத்துக்கு, மக்களை அழைத்து வந்து பணம் விநியோகம் செய்ததாக போலீசார் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்தி சிலை அருகே நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு, கூட்டத்தை சோ்ப்பதற்காக ஆள்களைக் கூட்டி வந்து பணம் விநியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியானது. இதுதொடா்பாக போலீசார் ஆண் மற்றும் பெண் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நா.த.க ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் என்று சீமான் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “நா.த.க ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடி தொழிலை அரசே மேற்கொள்ளும். தற்போது உயர்ரக மீன்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள மக்களும் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களை சாப்பிடக்கூடிய நிலையை உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
▶மார்ச் – 31, பங்குனி – 18
▶கிழமை – ஞாயிறு
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 3:30 PM – 4:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 1:30 PM – 2:30 PM
▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM
▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM
▶குளிகை நேரம்: 3:00 PM – 4:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: சஷ்டி
▶நட்சத்திரம்: 10:56 PM வரை கேட்டை பிறகு மூலம்
Sorry, no posts matched your criteria.