News March 29, 2024

₹3,775 கோடி இழப்பை சந்தித்த ஸ்விக்கி

image

2022-23 ஆம் நிதியாண்டில் பிரபல இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ₹3,775 கோடி ($500 மில்லியன்) இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கு சந்தையில், பொதுப் பங்கு வெளியீட்டுக்காக அந்நிறுவனம் அளித்திருந்த ஆவணத்தில் இந்த நஷ்டம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த வேலைநீக்கம் உள்ளிட்ட வழிகளில் செலவுக் குறைப்பை மேற்கொண்டு வருகிறது.

News March 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மேடைகளில் பேசும் திமுக பேச்சாளர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும் – துரைமுருகன்
*தமிழகத்தில் 110 தொகுதிகளில் பாமக என்ற கட்சியே கிடையாது – கே.பி.அன்பழகன்
*எல்லையில் படைகள் வாபஸ் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவுபெற்றது.
*DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RR அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* 2022-23 ஆம் நிதியாண்டில் ஸ்விக்கி 3,775 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

News March 29, 2024

பிரபல தாதா உயிரிழப்பு… உ.பி.,யில் பதற்றம்!

image

உ.பி.யில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (63) மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணமாக இவர் கடந்தாண்டு தண்டனை பெற்று, லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News March 29, 2024

பனிப்பாறை உருகுவதால் பூமியின் சுழல் வேகம் குறையும்

image

அண்டார்டிகா, கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகி வெப்பமயமாதல் அதிகரிப்பதால், நேரக்கட்டுப்பாட்டை இழந்து, பூமி தனது சுழலும் வேகத்தை குறைக்குமென புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்திலிருந்து (UTC) ஒரு வினாடி கழிக்கப்பட வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ வேகத்தில் சுழன்று வருவது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2024

BREAKING: ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RR அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 9ஆவது போட்டியில், டாஸ் வென்ற RR அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முடிவில் RR அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 186 ரன்கள் இலக்கை துரத்திய DC அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

News March 28, 2024

செமி கண்டக்டர் உற்பத்தியில் இந்தியா சாதிக்கும்

image

அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வருமென மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘ஒரே நேரத்தில் 4 செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவது பெரிய சாதனை. ஐஃபோன் உற்பத்தி மூலம் ஆப்பிள் நிறுவனம் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்துள்ளது’ என்றார்.

News March 28, 2024

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இளம்பெண்

image

பியூட்டி பார்லரில் அடிக்கடி Hair Straightening செய்ததால் 26 வயது இளம் பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடியை நேராக்கப் பயன்படுத்தப்படும் அமிலங்கள் இளம் பெண்ணின் உடலில் நுழைந்து சிறுநீரகத்தை பாதித்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகை மெருகேற்ற தற்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

News March 28, 2024

‘கேளிக்கை விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமல்ல’

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்ததற்கு, மெட்ரோ பணிகள் காரணமல்ல என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட அதிர்வு காரணமென தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள மெட்ரோ நிர்வாகம், விபத்து பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கமளித்துள்ளது.

News March 28, 2024

இந்த ராசியினருக்கு இனிமேல் கஷ்ட காலம்

image

சனி பகவானின் உக்கிரப் பார்வை பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறருக்கு ஜாமின் தருவது, பத்திரங்களில் சாட்சிக் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், எதிர்பாராத இன்னல்கள் தேடி வரும் என்பதால் பரிகாரங்களை செய்து அதன்மூலம் ஆபத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!