News March 31, 2024

குஜராத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

image

அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 162/8 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே SRH அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய க்ளாஸான் இன்று 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடைசியில் களமிறங்கிய சமத்தின் (29) அதிரடி ஆட்டத்தால் SRH 162 ரன்கள் எடுத்துள்ளது. GT தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News March 31, 2024

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதில் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஏப். 1ஆம் தேதி முதல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

News March 31, 2024

அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது

image

பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சார்பில் திருச்சி சிவா MP அவரது உரையை வாசித்தார். அதில், தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து மத்திய அரசு கைது செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

News March 31, 2024

கச்சத்தீவு குறித்து கருணாநிதி கூறியது என்ன?

image

கச்சத்தீவு பிரச்னை மீண்டும் பூதாகரமாகும் நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 2016இல் தனது பேஸ்புக்கில், ‘கச்சத்தீவை தாரை வார்க்க எந்தக்காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை. உடன்பட்டதும் இல்லை. 1974ஆம் ஆண்டு ஆக.21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். கச்சத்தீவை மீண்டும் பெற போராடியிருக்கிறேன்’ என கூறியிருந்தார்.

News March 31, 2024

விசாரணையை எதிர்கொள்ள தயார்

image

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வேன் என அமீர் தெரிவித்துள்ளார். விசாரணையில் கொஞ்சமும் தயக்கமின்றி என்னுடைய தரப்பில் உள்ள உண்மையை, எடுத்துச் சொல்லி, 100 சதவீதம் வெற்றியோடு திரும்புவேன். இறைவன் மிகப்பெரியவன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அமீரின் நண்பர் ஜாஃபர் சாதிக் கைதான நிலையில், அமீரை வரும் ஏப்.2இல் ஆஜராக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News March 31, 2024

பரப்புரையில் பண கட்டை காட்டிய பாஜக வேட்பாளர்

image

தேர்தல் பரப்புரையின் போது 500 ரூபாய் பண கட்டை காட்டிய கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் வேடசந்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பையில் இருந்து திடீரென நோட்டுக்கட்டுக்களை எடுத்து பொதுமக்களிடம் காட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவர் உள்ளிட்ட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

கெஜ்ரிவால் விரைவில் வெளியே வருவார்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக அரசை விமர்சித்து பேசிய அவர், ‘கெஜ்ரிவாலின் கைது மூலம் இந்தியா கூட்டணியின் உறுதியை உடைக்கலாம் என பிரதமர் நம்புகிறார். தோல்வி பயம் காரணமாக அடுத்தடுத்து எதிர்கட்சித் தலைவர்களை பாஜக அரசு கைது செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்’ என்றார்.

News March 31, 2024

பாஜகவுக்கு ED, திமுகவுக்கு ரவுடி

image

மக்கள் விரோத திமுகவை மக்கள் தேர்தலில் அடித்து விரட்டுவார்கள் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “மக்களை மதிக்காத திமுகவையும், மதவெறி பிடித்த பாஜகவையும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ரவுடியை வைத்து மிரட்டும் திமுகவும், EDயை வைத்து பாஜகவும் மிரட்டுகிறது. இதற்கெல்லாம் அதிமுக பயப்படாது. நிச்சயம் 39 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும்” என்றார்.

News March 31, 2024

சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி

image

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரும் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். மரப்பாலம் பகுதியில் உள்ள மின்சாரத்துறை அலுவலகம் அருகே இருந்த கழிவுநீர் வாய்க்காலை 16 பேர் தூர் வாரினர். அப்போது மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியாகினர்.

News March 31, 2024

தங்கர் பச்சான் தற்போது கடனில் இருக்கிறார்

image

தங்கர் பச்சான் கடனில் இருக்கிறார். அவரிடம் பணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரில் பாமக சார்பில் போட்டியிடும் இயக்குனர் தங்கர் பச்சானை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ‘எதிர்த்தரப்பில் உள்ளோர் மண்ணை பொன்னாக்குவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிப்பர். ஏமாற வேண்டாம். மக்களின் பணிகளை தரமாக செய்யக்கூடிய தங்கர் பச்சானுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார்.

error: Content is protected !!